கிழக்கு மாகாண சபை அமர்வின் போது முஸ்லிம் காங்கிரஸ் கொண்டு வந்த அவசர கவன
ஈர்ப்பு பிரேரணை விவாதத்திற்கு எடுத்துகொள்ளப்படாததை அடுத்து ஏற்பட்ட
அமளிதுமளியினால் சபையமர்வு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அளுத்கம, பேருவளை, தர்ஹா மற்றும் வெலிப்பன்ன ஆகிய பகுதிகளில் முஸ்லிம்கள்
மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளைக் கண்டித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
அமைச்சரான நஸீர் அஹமட் உள்ளிட்ட உறுப்பினர்கள் அவசர கவன ஈர்ப்பு பிரேரணை
ஒன்றைக் கிழக்கு மாகாண சபையில் இன்று செவ்வாய்க்கிழமை கொண்டுவந்தனர்.
அந்த அவசரப் பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துகொள்வதற்கு
அனுமதியளிக்கப்படவில்லை. இதனையடுத்தே முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள்
செங்கோலைக் கைப்பற்றி சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான அமைச்சர் நஸீர்
அஹமட். ஏ.எம். ஜெமீல் அன்வர் றம்ழான் முஹம்மட், ஏ.எல்.எம். நஸீர், மற்றும்
ஏ.எல். தவாம் ஆகியோரே செங்கோலை கைப்பற்றிக்கொண்டு அவையை விட்டு வெளிநடப்பு
செய்தனர்.
இந்த உறுப்பினர்கள் கறுப்பு பட்டியணிந்து சபைக்கு இன்று செவ்வாய்க்கிழமை சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
கிழக்கு மாகாண சபையில் செங்கோலை கைப்பற்றி வௌிநடப்புச் செய்த மு.கா
Tuesday, June 17, 20140 comments
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment