மதத் தீவிரவாதிகள் தாக்குதல்கள் நடத்துவதற்காக கடந்த இரண்டு மூன்று தினங்களா ஒலிபெருக்கி மூலம் பிரதேசமெங்கும் அழைப்பு விடுத்தனர். இதன்போது இனமுறுகலை ஏற்படுத்தும் நோக்கில் செயறபடுவதை பாதுகாப்பு பிரிவினர் தடுத்திருக்கலாம். ஆனால் அவை கண்டுகொள்ளப்படவில்லை.
நேற்று இரவு தாக்குதல்களை நடத்தும் போது பொலிஸார் வெறுமனே பார்வையாளர்களாகவே இருந்தனர். கடும்போக்காளரகளை தடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. வெறுமனே பொலிஸாரும் அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் முஸ்லிம்களை பாதுகாப்பதற்கோ இனவாதிகளை தடுப்பதற்கோ எவ்விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
வெலிபிடிய, அதிகரிகொட, அம்பேபிடிய, மககொட, தர்கா நகர், பலபிடிய, துந்துவ ஆகிய பகுதிகளில் மோசமான நடவடிக்கைகள் இடம்பெற்றன. அத்தோடு தெஹிவலை தொடக்கம் பெந்தோட்டை வரையிலான பகுதிகளில் இயல்பற்ற சூழ்நிலை காணப்பட்டது.
அளுத்கமயில் 47 கடைகளுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் 11 கடைகள் முற்றாக எறிக்கப்பட்டுள்ளது. அத்தோடு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பேருவளையில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அளுத்கம தர்கா நகர் பகுதிகளில் பல வாகனங்கள் தீக்கிறையாக்கப்பட்டுள்ளது. களுத்துறையில் 2 கடைகள் உடைக்கப்பட்டுள்ளது.
அத்தோடு மத்துகமயில் உள்ள 6 ஆட்டுப்பண்ணைகளில் உள்ள ஆடுகள் எடுத்துச்செல்லப்பட்டு அறுத்துப்போடபட்டுள்ளதாகவும் அவர் தெரிவிததார்.
Post a Comment