சர்வதேசக் கிரிக்கெட் சபையின் புதிய நிர்வாகக் குழு
Sunday, June 29, 20140 comments
சர்வதேசக் கிரிக்கெட் சபையின் புதிய நிர்வாகக் குழுவின் அங்கத்துவர்களாக மேற்கிந்திய கிரிக்கெட் சபையின் தலைவர் டேவிட் கமரூன், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் நஜீம் சேதி ஆகியோர் இணைந்துள்ளனர்.
5 பேர் கொண்ட நிறைவேற்றுக் குழுவில் இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து சபைகளின் பிரதிநிதிகள் நிரந்தர இடத்தை வைத்துக் கொள்வார்கள். மற்றைய இடங்கள் இரண்டும் வருடங்களுக்கு ஒரு தடவை மாற்றப்படும்.
தலைமைப் பொறுப்பும் அவ்வாறே மாற்றப்படும். நிதி மற்றும் விளம்பரக் குழுவின் தலைவராக இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் தலைவர் ஜைல்ஸ் கிளார்க் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தக் குழுவில் இலங்கை கிரிக்கெட் அமைப்பின் தலைவர் ஜெயந்த தர்மதாச இணைக்கப்பட்டுள்ளார்.
இன்னும் சில குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. புதிய நிர்வாக மாற்றத்திற்கான பரிந்துரையை இந்தியா கிரிக்கட் சபை சார்பாக ஸ்ரீநிவாசன் முன் வைத்தார். இந்த மாற்ற திட்டங்கள் முழுமையாக ஸ்ரீனிவாசனின் எண்ணத்தின்படி மாற்றப்பட்டுள்ளது.
Post a Comment