பொதுபல சேனாவிடம் விசாரணை நடத்துமாறு சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை
Sunday, June 29, 20140 comments
பொதுபல சேனாவின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்துமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. பொதுபல சேனா இயக்கத்திற்கு எதிரான குற்றச்சாட்டு;க்கள் குறித்து அரசாங்கம் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் நடத்தப்பட்ட கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டு;ள்ளது.
பொதுபல சேனா இயக்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக சட்டம் ஒழுங்கை பாதுகாப்போர் உரிய நடவடிக்கை எடுக்காமை கண்டிக்கப்பட வேண்டியது என தெரிவித்துள்ளது. பொதுபல சேனா இயக்கம் குரோத உணர்வைத் தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டு வருவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
Post a Comment