இலங்கையின் மத்திய பகுதிகளில் கடும் மழை; இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Friday, June 13, 20140 comments


மத்திய மலைநாட்டில் தொடர்ந்தும் கடும் மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, மேல் கொத்மலை நீர் தேக்கத்தின் நான்கு அவசர கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நுவரெலிய மாவட்ட அரசாங்க அதிபர் டீ.பி.ஜி குமாரசிறி தெரிவித்துள்ளார்.

அத்துடன், லக்ஸபான, நோட்;டன் பிரீட்ஜ், காசல்ரீ, ஆகிய நீர்த்தேக்கங்களின் அவசர கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக நீர்தேக்கத்தின் கீழான பகுதிகள்  மற்றும் மஹாவலி மற்றும் களணி கங்கைகளின் கீழான பிரதேசத்தில் உள்ள மக்களும் அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தெனியாய – ரக்வான வீதியின் ஹெதரெலிவத்த பிரதேசத்தில் உள்ள கருத்தபாலம் உடைந்ததன் காரணமாக, அந்த வீதியுடனான போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதன்காரணமாக, அந்த பாதையை பயன்படுத்துபவர்கள் மாற்று வழிகளை உபயோகிக்குமாறு காவற்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் சாரதிகளை கோரியுள்ளது.

அதேபோல் கினிகத்தேன தியகம பிரதான வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக அறிவிப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பிராதான பாதையின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, நுவரெலியா, கண்டி, கேகால்லை மற்றும் இரத்தினபுரி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு எதிர்வரும் 24 மணிநேரத்திற்கு மண்சரிவு அபாயம்  நிலவுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், மழையால் பாதிக்கப்படும் மக்களுக்கு அவசர நிவாரண மத்திய நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டு வருவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

இதன்படி, 0717887722, 0717399999, 0727887722, 0727200000 என்ற அவசர  தொலை பேசியினூடாக தொடர்பு கொள்ள முடியும் எனவும் அமைச்சு  குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, கொழும்பு – பதுளை பிரதான இரவு  நேர தொடரூந்து சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தொடரூந்து கட்டுப்பாட்டு மையம் குறிப்பிட்டுள்ளது.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham