உதைபந்தாட்ட உலகக்கிண்ணத் திருவிழா கோலாகல ஆரம்பம்

Friday, June 13, 20140 comments



உதைபந்தாட்ட உலகக்கிண்ணத் திருவிழா நேற்று கோலாகலமாக பிரேஸிலில் நேற்று இலங்கை நேரப்படி இரவு 11.45 மணிக்கு தொடங்கியது. சர்வதேச உதைபந்தாட்டக் கூட்டமைப்பான 'பிபா' உதைபந்தாட்ட உலகக்கிண்ணப் போட்டிகளை நடாத்துகின்றது. இதில் 32 நாடுகள் பங்கேற்கின்றன.

இம்முறை நடக்கும் இருபதாவது உலகக்கிண்ணப் போட்டி பிரேஸிலில் நடக்கிறது. இதன் தொடக்க விழா நேற்று பிரேசிலின் சாவோ போலோ மைதானத்தில் இடம்பெற்றது. கண்ணைக் கவரும் விதத்தில் எல்.ஈ.டி. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட இராட்சத பந்து மைதானத்தில் வந்து 32 நாடுகளின் மொழிகளிலும் 'நல்வரவு' என ஒளிர்ந்தது. பின் அப்படியே தாமரை வடிவில் விரிந்து மேடையாகியது. அந்த மேடையில் அமெரிக்காவின் பிரபல் பொப் இசைப் பாடகி ஜெனீபர் லோப்ஸ், பிரேசிலின் பிரபல பாடகி கிளாடியா லெய்ற்றி மற்றும் பாடகர் பிட்புல் ஆகியோர் உத்தியோகபூர்வ பாடலான "வீ ஆர் ஒன்...." பாடலைப் பாடினர்.

இந்த சமயத்தில் அமேசன் காடுகளின் முக்கியத்துவத்தை - சுற்றுச் சூழல் விழிப்புணர்வை ஏறபடுத்தும் விதத்தில் மரங்கள், பூக்கள் என வேடமிட்ட கலைஞர்கள் மேடையை சுற்றிலும் நின்று அமேசன் காடுகளின் தோற்றத்தை உருவாக்கினர். இதேபோன்று உதைபந்தாட்டத்தின் பெருமையை உணர்த்தும் விதத்திலும் உதைபந்து போன்று வேடமிட்ட கலைஞர்களும் கூடி நடன நிகழ்வுகளை வழங்கி பார்வையாளர்களை ஆரவாரப்படுத்தினர்.

இந்த நிகழ்வுகளில் 600 இற்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்குகொண்டிருந்தனர். இதன்பின்னர் ரோபோ வேடமணிந்த முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் பந்தை உதைத்து தொடக்கி வைக்க சுமார் இருபத்தைந்து நிமிடங்களில் இந்த நிகழ்ச்சி நிறைவுக்கு வந்தது. இந்த தொடக்க விழாவில் ஐ.நாவின் செயலாளர் நாயகம் பான் கீ -மூன் உட்பட பல நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர். தொடக்க விழாவை பல்லாயிரக்கணக்கானோர் நேரிலும் கோடிக் கணக்கான ரசிகர்கள் தொலைக்காட்சி, இணையங்கள் மூலமாகவும் பாரத்தனர்.






Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham