2015ம் ஆண்டு முதல் அனைத்து கர்ப்பிணிப்
பெண்களுக்கும் எச்.ஐ.வீ பரிசோதனை நடத்தப்பட உள்ளது.
தாயிடமிருந்து
பிள்ளைக்கு நோய்த் தொற்று பரவுவதனை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை
எடுக்கப்பட உள்ளதாக தேசிய எயிட்ஸ் நோய்த் தடுப்புப் பிரிவு அறிவித்துள்ளது.
எதிர்வரும் 2015ம் ஆண்டு இறுதியளவில் நாட்டின் சகல கர்ப்பிணித்
தாய்மார்களுக்கும் எச்.ஐ.வீ நோய்த் தொற்று தொடர்பிலான பரிசோதனை நடத்தப்பட
உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில்
தாயின் ஊடாக குழந்தைக்கு எயிட்ஸ் நோய் தொற்றக்கூடிய சாத்தியம் 40 – 50
வீதமாக காணப்படுகின்றது என குறிப்பிட்டுள்ள தேசிய எயிட்ஸ் நோய்த் தடுப்புப் பிரிவு, பரிசோதனை முறைமைகளை
விரிவுபடுத்தி சிறந்த முறையில் எயிட்ஸ் நோய்த் தவிர்ப்பு நடவடிக்கைகளை
முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
Post a Comment