கண்டிக்குள் அச்சம் தேவையில்லை; எல்லா பகுதிகளிலும் அமைதிநிலை - லாபிர் ஹாஜியார்
Tuesday, June 24, 20140 comments
கண்டு பகுதிக்குள் அச்சமான சூழ்நிலை எதுவும் இல்லை. எல்லா பகுதிகளிலும் அமைதியான நிலை காணப்படுகிறது. எனவே மக்கள் எதற்கும் பயப்பட தேவையில்லை என மத்திய மாகாண சபை உறுப்பினரும் கண்டி தொகுதி ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளருமான ஜெய்னுலாப்தீன் லாபிர் ஹாஜியார் நம்மவனுக்கு தெரிவித்தார்.
கண்டியில் பொதுபல சேனாவினர் போதி பூஜாவொன்றை நடத்தவிருப்பதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து மக்கள் அச்சத்துடன் காணப்பட்டனர். இந்நிலையில் அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் இன்று காலை முதல் பல பகுதிகளுக்கும் சென்று அவதானித்த பின்னர் சற்றுமுன்னர் நம்மவன் சமூக வலைத்தளத்துக்கு தொடர்புகொண்டு தெரிவித்திருந்தார்.
இன்று மதியம் லுஹர் தொழுகைக்காக கண்டி லைன் பள்ளிவாசலுக்கும் சற்று முன்னர் மீறா மகாம் பள்ளிவாசலுக்கும் சென்றிருந்ததாகவும் அத்தோடு இன்று காலை முதல் பல பகுதிகளுக்கு சென்றதாகவும் முஸ்லிம்கள் அச்சம்கொள்ளும் அளவுக்கு எவ்வித சுமூகமற்ற நிலையும் இல்லை எனவும் லாபிர் ஹாஜியார் மேலும் தெரிவித்தார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment