அளுத்கம சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாண சபையில் கண்டனப் பிரேரணை!
Tuesday, June 17, 20140 comments
அளுத்கம பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் பொது பல சேனா இயக்கத்தையும் அரசாங்கத்தையும் கண்டித்து கிழக்கு மாகாண சபையில் இன்று (17) அவசர விசேட பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் இப்பிரேரணையை சமப்பிக்கவுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் வேண்டுகோளின் பேரில் அவர் இப்பிரேரணையை சமர்ப்பிக்கவுள்ளார் என அறிவிக்கப்படுகிறது.
கிழக்கு மாகாண சபையின் மாதாந்த சபை அமர்வு தவிசாளர் ஆரியபதி கலப்பதி தலைமையில் இன்று காலை 9.30 மணியளவில் நடைபெறவுள்ளது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment