நண்பன் அக்கறைப்பற்று இஸ்ஹாக் விபத்தில் மரணம்
Tuesday, June 24, 20140 comments
அட்டாளைச்சேனை பிரதான வீதியில் கடந்த திங்கட்கிழமை இரவு 9.30 மணியளவில் நடந்த மோட்டார்சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் பலியானதுடன் மற்றுமொரு இளைஞர் படுகாயமடைந்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார்சைக்கிள் மாடு ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார்சைக்கிளை செலுத்தி சென்ற சம்சுதீன் இஸ்ஹாக் (வயது 20) என்ற இளைஞர் உயிரிழந்துள்ளதாகவும் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து சென்ற ஆப்தீன் சியாம் (வயது 17) என்ற இளைஞர் படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இருவரும் அக்கரைப்பற்று 6 யைச் சேர்ந்தவர்கள்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது; சம்பவ தினம் இரவு 7.30 மணியளவில் இரு இளைஞர்களும் ஒரு மோட்டார் சைக்கிளில் அக்கரைப்பற்றிலிருந்து சம்மாந்துறை பிரதேசத்திற்கு சென்று அங்கிருந்து இரவு 10 மணியளவில் அக்கரைப்பற்று நோக்கி திரும்பி வரும் போது அட்டாளைச் சேனை பிரதான வீதியில் மாடு ஒன்றுடன் மோதியுள்ளனர்.
இதன் போது படுகாயமடைந்த இருவரும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் இஸ்ஹாக் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை உயிர் இழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment