அரசியல் மயமாகிறது கிராண்ட்பாஸ் பள்ளி விவகாரம்

Monday, June 9, 20140 comments



ஏ.ஆர்.ஏ. பரீல்

'கிராண்ட்பாஸ், பழைய தீனுல் இஸ்லாம் பள்­ளி­வாசல் தொடர்ந்து இயங்­கு­வதில் எமக்கு எந்தப் பிரச்­சி­னை­யு­மில்லை. ஆனால், களஞ்­சி­ய­சாலை என்ற பெயரில் நிர்­மா­ணிக்­கப்­பட்ட புதிய பள்­ளி­வா­சலை ரமழான் மாதத்தை காரணம் காட்டி திறக்க முடி­யாது.

இதற்­கான முயற்­சி­களில் பிர­தி­ய­மைச்சர் பைசர் முஸ்­த­பாவும், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேன­நா­யக்­காவும் ஈடு­பட்­டுள்­ளார்கள். இதனை கிரேண்ட்பாஸ் மோல­வத்தை பகுதி பெரும்­பான்மை மக்­களும், விகாரை அதி­ப­தியும் விரும்­ப­வில்லை.

அவ்­வாறு புதிய பள்­ளி­வாசல் திறக்­கப்­பட்டால் அப்­ப­கு­தியில் மீண்டும் இன­மு­று­கல்கள் உரு­வாகி கல­வ­ரங்கள் ஏற்­படும். இதற்­கான பொறுப்பை பிர­தி­ய­மைச்­சரும், பிரதி பொலிஸ்மா அதி­ப­ருமே ஏற்­றுக்­கொள்ள வேண்டும்' என ஜாதிக ஹெல உறு­மய கட்சி தெரி­வித்­துள்­ளது.

கடந்த மாதம் பெரும்­பான்மை மக்கள் வெசாக் பண்­டி­கையை கோலா­க­ல­மாக கொண்­டா­டி­னார்கள். நாடெங்கும் வெசாக் அலங்­காரப் பந்­தல்கள் பல வர்­ணங்­களில் புத்த பெரு­மானின் வாழ்க்கை முறை­மை­யினை மக்­க­ளுக்கு நினை­வூட்­டின.

வீதிகள் தோறும் அன்­ன­தா­ன­சா­லைகள் புத்­த­பெ­ரு­மானின் பெயரால் அமைக்­கப்­பட்­டி­ருந்­தன. இந்த அன்­ன­தான சாலைகள் பெரும்­பான்மை மக்­களின் நிதி­யு­த­வி­யினால் மாத்­தி­ர­மல்ல முஸ்­லிம்­களும் தமது பங்­க­ளிப்­பினை வழங்­கி­யி­ருந்­தனர். நகர் மற்றும் சேரிப்­ப­கு­தி­களில் பெளத்த கொடிகள் முஸ்­லிம்­களின் வீட்டுச் சுவர்­க­ளிலும் காட்­சிக்கு வைக்­கப்­பட்­டி­ருந்­தன.

கிராண்ட்பாஸ் மோல­வத்தை பகு­தி­யிலும் இந்­நி­லை­மை­யினை காண முடிந்­தது. இது மக்­க­ளுக்­கான மதச் சுதந்­திரம். அவர்­க­ளது உரிமை. கிராண்ட்பாஸ் மோல­வத்தை பகு­தியில் முஸ்­லிம்கள் அன்­ன­தான சாலை­க­ளுக்கு எதிர்ப்புத் தெரி­விக்­க­வில்லை. பெளத்த கொடி­க­ளுக்கும் சோட­னை­க­ளுக்கும் முகம் சுளிக்­க­வில்லை. பெரும்­பான்­மை­யி­ன­ருடன் இணைந்து செயற்­பட்­டார்கள். அன்­ன­தா­ன­சா­லை­க­ளுக்கு நிதி­யு­தவி வழங்­கி­னார்கள்.

இதே­போன்று இன்­னுமோர் சமூகம் தனது ரமழான் மாத செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­க­வுள்­ளது. இம்­முன்­னெ­டுப்­புகள் அன்­ன­தா­ன­சா­லை­க­ளாக இல்லை. சோட­னை­க­ளுடன் கூடி­ய­தான சமயக் கட­மை­யாக இல்லை. இர­வு­நேர தொழு­கை­களும், மார்க்க பிர­சங்­கங்­களுமே அவை.

கிராண்ட்பாஸ் மோல­வத்தை பகுதி முஸ்­லிம்கள் ரமழான் மாதத்­துக்கு தயா­ராகிக் கொண்­டி­ருக்­கி­றார்கள். சுமார் 450 குடும்­பங்கள், சுமார் ஆயிரம் மக்கள் தொழு­கை­க­ளுக்­கா­கவும், பயான்­களை கேட்­ப­தற்­கா­கவும் ஒன்­று­கூட வேண்­டி­யுள்­ளது. ஆனால், அவர்­க­ளுக்கு தற்­போது இருப்­பதோ 1 3/4 பேர்ச் காணியில் அமைந்­துள்ள ஒரு சிறிய பள்­ளி­வாசல். மிஞ்­சிப்­போனால் சுமார் 50 பேர் ஒன்­று­கூ­டலாம். பள்­ளி­வா­சலின் நீளம் 33 அடிகள் மாத்­தி­ரமே.

கடந்த வருடம் ரமழான் மாதத்தில் தீனுல் இஸ்லாம் பள்­ளி­வாசல் ஒரு புதிய கட்­டி­டத்தில் இயங்­கி­யது. அது மாடிக் கட்­டிடம். அது ஒரு களஞ்­சி­ய­சாலை. கட்­டிடம் என்று இர­க­சி­ய­மாக அமைக்­கப்­பட்டு பள்­ளி­வா­ச­லாக மாற்­றப்­பட்­ட­தாக விமர்­ச­னத்­துக்­குள்­ளா­கி­யது. இத­னை­ய­டுத்து இக்­கட்­டி­டத்தை ரமழான் மாத சமயக் கட­மை­க­ளுக்கு மாத்­திரம் பயன்­ப­டுத்­து­வ­தற்கு புத்­த­சா­சன மற்றும் சமய விவ­கா­ரங்­க­ளுக்­கான அமைச்சு அனு­மதி வழங்­கி­யி­ருந்­தது.

கடந்த வருடம் ரமழான் முற்­றுப்­பெற்ற கையோடு அந்தப் புதிய பள்­ளி­வாசல் கட்­டி­டத்தை மூடி­விட்டு ஜமா­அத்­தார்கள் வெளி­யேற இருந்த நிலையில் பெரு­நா­ளன்று மறு­தினம் பெரும்­பான்­மை­யி­னரால் தாக்­கப்­பட்­டது. முஸ்­லிம்­களும் தாக்­கப்­பட்­டார்கள். அப்­பி­ர­தே­சத்தில் பதற்ற நிலை உரு­வா­கி­யது. பொலி­ஸாரும், இரா­ணு­வத்­தி­னரும் குவிக்­கப்­பட்­டனர்.

புதிய பள்­ளி­வாசல் இழுத்து மூடப்­பட்­டது. புதிய பள்­ளி­வாசல் கட்­டி­டத்தில் பள்­ளி­வாசல் இயங்­கக்­கூ­டாது என மத­வி­வ­கா­ரங்­க­ளுக்­கான அமைச்சின் செய­லா­ளரும் தடை விதித்தார்.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி புத்­த­சா­சன மற்றும் மத­வி­வ­கா­ரங்­க­ளுக்­கான அமைச்சில் அமைச்சர் தினேஷ் குண­வர்­த­னவின் தலை­மையில் கிராண்ட்பாஸ் தீனுல் இஸ்லாம் பள்­ளி­வாசல் விவ­காரம் தொடர்­பான கூட்­ட­மொன்று கூட்­டப்­பட்டு சில தீர்­மா­னங்கள் நிறை­வேற்­றப்­பட்­டன. தீனுல் இஸ்லாம் பள்­ளி­வா­சலின் இடப்­பற்­றாக்­கு­றை­யினை தீர்ப்­ப­தற்­காக 6 பேர்ச் காணி பெற்றுத் தரு­வ­தாக அமைச்சின் செய­லாளர் உறுதி வழங்­கி­யி­ருந்தார்.

இந்­நி­லையில் சுமார் ஒரு வருட கால­மா­கியும் பள்­ளி­வாசல் விவ­கா­ரத்தில் அளிக்­கப்­பட்ட உறுதி மொழிகள் நிறை­வேற்­றப்­ப­டாமை குறித்து முத­லீட்டு ஊக்­கு­விப்பு பிர­தி­ய­மைச்சர் பைசர் முஸ்­தபா, அமைச்சின் செய­லாளர் திஸா­நா­யக்­கா­வுக்கு கடி­த­மொன்­றினை அனுப்­பி­விட்டு இரு வாரங்­க­ளுக்கு முன்பு மோல­வத்தை பகு­திக்கு விஜ­ய­மொன்­றினை மேற்­கொண்­டி­ருந்தார்.
பிர­தி­ய­மைச்சர் பைசர் முஸ்­தபா சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேன­நா­யக்­கா­வையும் தன்­னுடன் அழைத்துச் சென்­றி­ருந்தார். அவர்கள் பழைய பள்­ளி­வா­ச­லையும், புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்டு கடந்த வருடம் ரமழான் தொழு­கை­யுடன் மூடப்­பட்­டு­விட்ட பள்­ளி­வா­ச­லையும் பார்­வை­யிட்­டனர். இதற்கு ஜாதி­க­ஹெல உறு­மய கட்சி கடும் எதிர்ப்­பினை வெளி­யிட்­டுள்­ளது.

கிராண்ட்பாஸ் மோல­வத்­தையில் மீண்டும் பள்­ளி­வா­சலை புனர்­நிர்­மாணம் செய்ய முனைந்தால் பெளத்­தர்­களின் பொறுமை எல்லை தாண்­டி­விடும். மீண்டும் இப்­ப­கு­தியில் முறுகல் நிலை தோன்றி இன மோதல்கள் ஏற்­படும் என்று ஹெல உறு­மய கட்சி தெரி­வித்­துள்­ள­துடன் இதற்­கான முழுப் பொறுப்­பையும் பிர­தி­ய­மைச்சர் பைசர் முஸ்­த­பாவும், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேன­நா­யக்­க­வுமே பொறுப்­பேற்க வேண்டும் என வேண்­டுகோள் விடுத்­துள்­ளது.

பத்­த­ர­முல்­லை­யி­லுள்ள ஜாதிக ஹெல உறு­ம­யவின் தலை­மை­ய­கத்தில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் அக்­கட்­சியின் ஊடக செய­லா­ளரும், மேல் மாகாண சபை உறுப்­பி­ன­ரு­மான நிஸாந்த ஸ்ரீ வர்­ண­சிங்க தெரி­வித்­துள்ள கருத்­துக்கள் மோல­வத்தை பகுதி முஸ்­லிம்­க­ளி­டையே ஒரு பீதியை உரு­வாக்­கி­யுள்­ள­மையை அவ­தா­னிக்க முடி­கி­றது.
நிஸாந்த ஸ்ரீ வர்­ண­சிங்க ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் தெரி­வித்­துள்ள கருத்­துகள் மிகவும் ஆழ­மாக நோக்­கப்­பட வேண்­டி­ய­தாகும். அவர் இவ்­வாறு கூறி­யுள்ளார். கிராண்ட்பாஸ் பள்­ளி­வாசல் தொடர்­பான பிரச்­சி­னையை சர்­வ­தேச மட்டம் வரை­கொண்டு சென்ற முஸ்லிம் அர­சியல் பிர­தி­நி­திகள் இலங்­கையை மத சுதந்­தி­ர­மற்ற நாடாக சித்­த­ரித்துக் காட்­டி­யுள்­ளார்கள். சுவர்ண சைத்­திய வீதியில் களஞ்­சி­ய­சாலை என்று கூறி ஒரு பள்­ளி­வா­சலை நிர்­மா­ணித்து அதில் சமய கட­மை­களை ஆரம்­பித்­த­போது இப்­ப­குதி மக்­க­ளி­டையே குழப்ப நிலை ஏற்­பட்­டது. இந்த கட்­டி­டத்தை பள்­ளி­வா­ச­லாக மாற்­று­வ­தற்கு மத விவ­கார அமைச்சு தடை விதித்­தது.

பல வரு­டங்­க­ளாக இயங்கி வந்த தீனுல் இஸ்லாம் பள்­ளி­வா­ச­லுக்கு இடை­யூ­றாக இருந்த அரச மரமும் அகற்­றப்­பட்­டது. அமைச்­சர்கள் முன்­னின்று மத நல்­லி­ணக்­கத்தை பாது­காப்­ப­தற்­காக தீர்வு நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டனர். பிரச்­சி­னைக்குத் தீர்வும் காணப்­பட்­டது.

ஆனால், மூடிய நிலை­யி­லுள்ள குறிப்­பிட்ட களஞ்­சி­ய­சா­லையை ரமழான் மாதத்தை இலக்­காக வைத்து பள்­ளி­வா­ச­லாக மாற்­று­வ­தற்கு சில சக்­திகள் முயன்று வரு­கின்­றன.

அண்­மையில் இக்­க­ளஞ்­சி­ய­சாலை பொலிஸ் பாது­காப்­புடன் புனர்­நிர்­மாணம் செய்­யப்­பட்­டுள்­ளன. இந்த நட­வ­டிக்­கை­களை பார்வையிடுவதற்­காக பிர­தி­ய­மைச்சர் பைசர் முஸ்­த­பாவும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேன­நா­யக்­கவும் சென்­றுள்­ளனர். புனர்­நிர்­மாணப் பணி­களை பார்­வை­யிட வந்த இவர்கள் இப்­ப­குதி சுவர்ண சைத்­திய விகாரை அதி­ப­தி­யையும் சந்­தித்­துள்­ளனர். இப்­ப­கு­தியில் பள்­ளி­வா­சலை அமைக்கப் போவ­தா­கவும் தெரி­வித்­துள்­ளனர்.

இவ்­வி­ரு­வ­ரதும் இவ்­வா­றான செயற்­பா­டுகள் இப்­ப­கு­தியில் அணைந்­தி­ருந்த இன­வா­தத்தை மீண்டும் ஆரம்­பித்து வைத்­துள்­ளன. இப்­ப­கு­தியில் மீண்டும் இன முறுகல் நிலை உரு­வானால் அதனால் ஏதும் அசம்­பா­வி­தங்கள் ஏற்­பட்டால் அதற்கு ஜாதிக ஹெல உறு­மய கட்­சி­யையோ அல்­லது வேறு மத அமைப்­பு­க­ளையோ குற்றம் சுமத்த வேண்டாம். விளை­வு­க­ளுக்கு பைசர் முஸ்­த­பாவும் அநுர சேனா­நா­யக்­க­வுமே பொறுப்­பாக இருக்க வேண்டும்.
பெளத்­தர்­களை எப்­போதும் ஏமாற்றி விடலாம் என்று எண்ண வேண்டாம். தீனுல் இஸ்லாம் பள்­ளி­வாசல் விவ­கா­ரத்தில் எமது வணக்­கத்­துக்­கு­ரிய பொரு­ளான அரச மரத்­தையே முஸ்லிம் மக்­க­ளுக்­கா­கவும் மத நல்­லி­ணக்­கத்­துக்­கா­கவும் தியாகம் செய்­துள்ளோம். பெளத்த மக்­களை ஏமாற்றும் முயற்­சிகள் தொடர்ந்தால் அவற்­றுக்கு எதி­ராக பெளத்­தர்­களின் உரி­மை­க­ளுக்­காக நாம் போராட வேண்­டி­யேற்­படும்.

பிர­தி­ய­மைச்சர் பைசர் முஸ்­த­பா­வி­னதும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனா­நா­யக்­க­வி­னதும் கிராண்ட்பாஸ் மோல­வத்தை பிர­தே­சத்­துக்­கான விஜயம் அப்­ப­குதி இனங்­க­ளுக்­கி­டையில் மீண்டும் முறுகல் நிலையை தோற்­று­விக்­கலாம் என தீனுல் இஸ்லாம் நிர்­வாக சபை உறுப்­பினர் எம்.எம்.சம்­சுதீன் கடந்த வாரம் விடி­வெள்­ளிக்கு தெரி­வித்­தி­ருந்­த­மையை இவ்­வி­டத்தில் ஞாப­கப்­ப­டுத்த வேண்­டி­யுள்­ளது.

இந்த பள்­ளி­வாசல் விவ­கா­ரத்­தினால் இனங்­க­ளுக்­கி­டையில் முறுகல் நிலை ஏற்­ப­டு­வ­தையோ குரோத மனப்­பான்மை உரு­வா­கு­வ­தையோ நாங்கள் விரும்­ப­வில்லை. இந்­தப்­ப­குதி பெரும்­பான்மை மக்­க­ளு­டனும் பெளத்த குரு­மா­ரு­டனும் கலந்து பேசி மூடிக்­கி­டக்கும் பள்­ளி­வா­சலை திறந்து தரு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை அர­சியல் தலை­மை­களும் சமூ­கத்­த­லை­வர்­க­ளு­டனும் முன்­னெ­டுக்க வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரி­வித்­தி­ருக்­கிறார்.
கிராண்ட்பாஸ் மோல­வத்தை பகுதி சைத்­திய விகாரை அதி­பதி தம்­மா­னந்த தேரரும் இந்த ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். எனவே, மூடிக்­கி­டக்கும் களஞ்­சி­ய­சாலை என்று கூறப்­படும் பள்­ளி­வாசல் கட்­டி­டத்தை மீண்டும் திறப்­ப­தற்கு ஜாதிக ஹெல உறு­மய மாத்­தி­ர­மல்ல அப்­ப­குதி விகா­ரையில் குரு­மார்­களும் விரும்­ப­வில்லை என்­பது தெளி­வா­கி­றது.

பிர­தி­ய­மைச்­சரின் விஜ­யத்­தி­னை­ய­டுத்து இப்­ப­குதி பெரும்­பான்­மை­யின மக்கள் சிறு சிறு குழுக்­க­ளா­கக்­கூடி பல விமர்­ச­னங்­களை முஸ்­லிம்­களை பாதிக்கும் வகையில் தெரி­வித்து வரு­வ­தா­கவும் இப்­ப­குதி முஸ்­லிம்கள் தெரி­விக்­கின்­றனர். எனவே, அர­சி­யல்­வா­திகள் இப்­பி­ரச்­சி­னையில் மூக்­கினை நுழைப்­பதை விடுத்து அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை, வக்பு சபை பிர­தி­நி­திகள் அப்­ப­குதி விகா­ரையைச் சேர்ந்த குரு­மார்­க­ளுடன் சுமு­க­மான பேச்­சு­வார்த்­தை­களை நடாத்­து­வ­தற்கு ஏற்­பா­டு­களைச் செய்ய வேண்டும்.

பிர­தி­ய­மைச்சர் பைசர் முஸ்­தபா


சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனா­நா­யக்­க­வு­ட­னான எனது விஜயம் தீனுல் இஸ்லாம் பழைய பள்­ளி­வா­சலை புனர்­நிர்­மாணம் செய்யும் நோக்­கு­ட­னேயே அமைந்­தி­ருந்­தது. ஜாதிக ஹெல உறு­மய கட்­சியின் மேல் மாகாண சபை உறுப்­பினர் நிஸாந்த ஸ்ரீவர்­ண­சிங்க ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் தெரி­வித்­துள்ள கருத்­தினை முற்­றாக மறுக்­கிறேன்.
நானும் அநு­ர­சே­ன­நா­யக்­கவும் கிராண்ட்பாஸ் புதிய பள்­ளி­வாசல் புனர்­நிர்­மாணப் பணி­களைப் பார்­வை­யிடச் செல்­ல­வில்லை. பழைய பள்­ளி­வா­ச­லையே பார்­வை­யிடச் சென்றோம். புதிய பள்­ளி­வா­சலை திறக்கும் நோக்­கமும் என்­னி­ட­மில்லை.

9 மாதங்­க­ளுக்கு முன்பு புத்­த­சா­சன மற்றும் சமய விவ­கா­ரங்­க­ளுக்­கான அமைச்சின் செய­லாளர் தீனுல் இஸ்லாம் பள்­ளி­வா­சலை புனர்­நிர்­மாணம் செய்ய ஏற்றுக் கொண்­டி­ருந்தார். 6 பேர்ச் காணி வழங்­கு­வ­தா­கவும் உறுதி வழங்­கி­யி­ருந்தார். 9 மாத கால­மா­கியும் உறுதி மொழி நிறை­வேற்­றப்­ப­டா­மை­யி­னா­லேயே அங்கு சென்று மக்­களைச் சந்­தித்து கலந்­து­ரை­யா­டினேன். இது தொடர்­பாக அமைச்சின் செய­லா­ள­ருக்கு கடி­த­மொன்­றி­னையும் அனுப்­பினேன்.

அப்பகுதியிலுள்ள விகாரைக்கும் சென்று மத குருமாரைச் சந்தித்து தீனுல் இஸ்லாம் பள்ளிவாசல் அபிவிருத்தி தொடர்பாகவும் கலந்துரையாடினேன். அவர்களின் அனுமதியினையும் பெற்றுக்கொண்டேன்.
இதைவிடுத்து அப்பகுதியில் மீண்டும் இனமுறுகலை எற்படுத்த வேண்டும் என்ற தேவை எனக்கில்லை. இனங்கள் நல்லிணக்கத்துடன் தத்தம் மதங்களைப் பின்பற்ற வேண்டும் என்பதே எனது விருப்பமாகும். நான் பெளத்த மதத்துக்கும் பல உதவிகளைச் செய்துள்ளேன் என்பதை அறியாதவர்களே இவ்வாறு பேசுகிறார்கள் என்றார்.

முஜிபுர் ரஹ்மான்

மேல் மாகாண சபை (ஐ.தே.க) உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் விடி­வெள்­ளிக்கு பின்­வ­ரு­மாறு கருத்து தெரி­வித்தார்.

அரச அதி­கா­ரிகள் உறு­தி­ய­ளித்­த­வாறு பள்­ளி­வாசல் நிர்­மா­ணித்து வழங்­கப்­பட வேண்டும். அர­சாங்கம் நிலை­மை­களை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வரு­வ­தற்­காக உறுதி மொழி­களை வழங்கி விட்டு மௌன­மாக இருப்­ப­தி­னா­லேயே பள்­ளி­வா­சல்­க­ளுக்கு இவ்­வா­றான நிலைமை ஏற்­ப­டு­கின்­றன.

தீனுல் இஸ்லாம் பள்­ளி­வாசல் விவ­கா­ரத்தில் அர­சியல் வாதிகள் தமது சுய­லாபம் கருதி தலை­யி­டு­வது மேலும் பிரச்­சி­னை­க­ளையே உரு­வாக்கும். ஜாதிக ஹெல உறு­ம­யவும் இது தொடர்­பாக நடாத்­திய ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் இன­வா­தத்­தையே உரு­வாக்­கி­யி­ருக்­கி­றது.

அர­சி­யல்­வா­திகள் மத விவ­கா­ரங்­களில் தலை­யிட்டு தமது செல்­வாக்­கினை அதி­க­ரித்துக் கொள்ள முனை­வதை சமூகம் ஒரு­போதும் ஏற்றுக் கொள்­ளாது.
இவ்­வி­வ­கா­ரத்தை அர­சியல் மயப்­ப­டுத்­து­வதால் பாதிக்­கப்­ப­டப்­போ­வது கொழும்­பிலும் ஏனைய பிர­தே­சங்­க­ளிலும் உள்ள அப்­பாவி முஸ்லிம் மக்­களே. இவ்­வி­வ­கா­ரத்தில் ஆளுக்கு ஆள் சுய­மாக இயங்­கு­வது நல்­ல­தல்ல. பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­துடன் இணைந்து கொழும்­பி­லுள்ள தலை­மை­க­ளுடன் கலந்­தா­லோ­சித்தே அடுத்­த­கட்ட நட­வ­டிக்­கை­யினை மேற்கொள்ள வேண்டும். வெறு­மனே அடுத்த தேர்­தலை இலக்­கு­வைத்து இயங்கி, வாக்கு வங்­கியை நிரப்­பலாம் என கன­வு­காணக் கூடாது.

 உண்­மையில் இவ்­வி­வ­கா­ரத்­திற்கு கடந்த வருடம் அமைச்சர் தினேஷ் குண­வர்­த­னவின் தலை­மையில் புத்­த­சா­சன அமைச்சில் இடம்­பெற்ற கூட்­டத்தின் போது தீர்வு எட்­டப்­பட்­டது. எனினும் அதனை அரசு நடை­மு­றைப்­ப­டுத்­த­வில்லை. இந்­நி­லையில் அதனை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கான முனைப்­பு­க­ளையே மேற்­கொள்ள வேண்டும். மாற்றமாக புதிய முறையில் பிரச்சினையை அணுகும் போது வேறுபல பிரச்சினைக்கு வழிவகுக்கும் என்றார்.

பள்­ளி­வாசல் மற்றும் மத­வி­வ­கா­ரங்­களில் அர­சியல் இடம்­பெ­றக்­கூ­டாது என்­பதே சமூ­கத்தின் எதிர்­பார்ப்­பாகும். அர­சியல் தலை­வர்கள் பள்­ளி­வாசல் விவ­கா­ரங்­களில் நேர­டி­யாக ஈடு­ப­டாது மதத்­த­லை­வர்கள் மூலம் தங்கள் பங்­க­ளிப்­பினைச் செய்ய முன்­வ­ரு­வதே நன்மை பயக்கும். பிர­தி­ய­மைச்சர் பைசர் முஸ்­தபா புத்­த­சா­சன மற்றும் மத விவ­கா­ரங்­க­ளுக்­கான அமைச்சின் செய­லாளர் திஸா­நா­யக்க அளித்த உறுதி மொழி நிறை­வேற்­றப்­ப­டாமை குறித்தே களத்தில் இறங்­கி­யுள்ளார். பிர­தி­ய­மைச்­சரை குறை காணு­வதன் மூலம் ஹெல உறு­மய தனது அர­சி­யலை பலப்­ப­டுத்திக் கொள்­வ­தற்கு முனைந்­தி­ருக்­கி­றது. பெரும்­பான்­மை­யி­னரின் வாக்­குப்­ப­லத்­தினை அதி­க­ரித்­துக்­கொள்ள முயற்­சித்­தி­ருக்­கி­றது.

இவ்­வாறு மத விவ­கா­ரங்­களில் அர­சியல் கலக்­கப்­ப­டு­வ­தினால் பாதிக்கப்படப்போவது மோலவத்தை பிரதேச மக்களே என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

நன்றி விடிவெள்ளி
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham