பொதுபலசேனாவின் பின்னால் கோத்தாபய அரசியல் செய்கிறார்: மங்கள
Sunday, June 29, 20140 comments
பொதுபலசேனாவின் பின்னால் கோத்தபாய ராஜபக்சவே இருப்பதாகவும் பாதுகாப்பு செயலாளர் அரசியல் செய்வதாகவும் குறிப்பிடும் ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர என்னைக் கைது செய்தால் மேலும் பல உண்மைகளை அம்பலப்படுத்துவேன் என்றும் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள – பௌத்தர்களின் வாக்குகளைப் பெறவே தெற்கில் கலவரங்கள் திட்டமிட்டு உருவாக்கப்பட்;டன என்று அவர் தெரிவித்தார். பொதுபலசேனாவிற்குப் பின்னாhல் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவே உள்ளார் என்பதை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கூறியதாகவும் அவர் நினைவுபடுத்தினார்.
இதனாலேயே இராணுவத்தினர் பார்த்துக்கொண்டிருக்க முஸ்லீம்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். மீண்டும் புலிகள் தலைதூக்குவதற்கான சந்தர்ப்பத்தை அரசாங்கம் ஏற்படுத்துகிறது எனத் தெரிவித்த அவர் தமிழ் மக்களுக்கு முறையான அரசியல் தீர்வொன்றை வழங்கினால் புலிகள் தலைதூக்கமாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
13ஆவது திருத்தச்சட்டத்திற்கு அப்பால் சென்று தமிழ் மக்களுக்கு தீர்வினை வழங்க வேண்டும். தமிழ் மக்களின் நம்பிக்கையை அரசு சீர்குலைக்கக்கூடாது எனவும் மங்கள சமரவீர சுட்டிக்காட்டினார். பாதுகாப்புச் செயலாளர் தனது பதவியில் இருந்து கொண்டு அரசியல் செய்கின்றார் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை நாட்டின் வெளிவிவகார அமைச்சராக தான் இருந்துள்ளதை சுட்டிக்காட்டிய மங்கள சமரவீர இன்றைய வெளிவிவகார அமைச்சு சூடான் போன்ற ஒரு நாட்டை உருவாக்கும் வகையியேயே அமைந்துள்ளது எனவும் தெரிவித்தார். என்னை கைது செய்தால் அதற்குத் தயார் எனத் தெரிவித்த மங்கள அதற்கு முன்னர் பல உண்மைகளை நான் அம்பலப்படுத்துவேன் என்றும் தெரிவித்தார்.
-
Post a Comment