வாழ்வின் வசந்தமே வருக

Sunday, June 29, 20140 comments


ரமலான் மாதம் பிறந்து விட்டால் சுவனத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன, நரகத்தின் வாயில்கள் முடப்படுகின்றன, ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றன. (ஹதீஸ்)

இப்புனித மிக்க ரமலானில் இறைவன் நமக்காக உலகத்தின் நிலையயே மாற்றிவிட்டான், இது வானம், பூமியின் வசந்த காலமாக இருக்கிறது. எல்லாம் நமக்காக தயார்படுத்தபட்டுவிட்டன ஆனால் நாம் அதற்க்கு தயாராகிவிட்டோமா!!!

நாம் என்ன செய்ய வேண்டும், இதோ சில வழி முறைகள்:

 1.  இந்த ரமலானில் முழு நன்மைகளையும் பரிபூரணமான முறையில் அடைந்து கொள்வதற்க்கு இறைவனிடம் துஆ செய்வது இதை இன்று முதல் துவங்குவது.

2  நமக்கு நாமே ஒரு உறுதி மொழி எடுப்பது ரமலானில் அனைத்துவிதமான பாவங்களை விட்டும் தவிர்ந்திருப்பேன். (உதாரணமாக: கண், காது, கை, கால்)

3  அதிகமாக நம் ஓய்வு நேரங்களை இறைவழிப்பாட்டில் கழிப்பதற்க்கு முயற்சிப்பது.

4.  அத்திவாசியமற்ற வேலைகளை ரமலானுக்கு முன் அல்லது பின் மாற்றிக்கொள்வது. உதாரணமாக ரமலானுக்கா செய்யக்கூடிய ஷாப்பிங் மற்றும் துணி எடுப்பது போன்றவற்றை முன்னமே முடித்து விட்டு இபாதத்துக்காக முழுமையாக நம்மை தயாராக்கிக் கொள்வது.

5  24 மணி நேரங்களையும் ஸுன்னத்தான வாழ்க்கைக்கு (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முழு ஸுன்னாவைப் பேண) ஒரு வாய்ப்பாக இந்த ரமலானை ஆக்கிக்கொள்வது.

6  நோன்பு சம்மந்தப்பட்ட பிக்ஹ் சட்டங்களை ரமலானுக்கு முன்னே அறிந்து கொள்வது (பேஸ்ட் உபயோகிப்பது, அத்தர் பயன்படுத்துவது, ஊசி போடுவது)

7  ஆபிஸிலும், டிரைவிங்கில் பொதுவாக ஓய்வாக இருக்கும் போது அதிகமாக ஸலவாத் ஒதிக்கொள்வது.

8  குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு ஒரு ஜூஸ்வு அல்லது 3 ஜூஸ்வு குர் ஆனில் இருந்து ஓதுவது என்று வழமைப்படுத்திக்கொள்வது. இந்த ரமலானில் ஒன்று / மூன்று குர் ஆன் முழுமையாக ஓதி முடிப்பதற்ககு முயற்சிப்பது.

9.  அதிகமாக நற்பண்புகளை வளர்த்துக்கொளவது, (அதற்க்கு எதிரான கோபத்தை முழுமையாக விடுவது, புறம்பேசுவதை தவிர்ப்பது, பொய்யை தவிர்ப்பது). யார் மீதாவது  கோபமாக இருந்தால் இந்த ரமலானில் அவரை மன்னித்து அவரோடு உறவை தொடர்வது.

10.  முடிந்த அளவு டிவி பார்பதை தவிர்ப்பது  நியூஸ் கேட்பதையும் சேர்த்து)

11.  இஃப்தார் மற்றும் ஸஹர் நேரங்களில் ஹலாலான உணவை எடுப்பது (முடிந்த அளவு நம் சொந்த வருமானத்தில் இருந்து ஆக்குவது) ஹராமான உணவை விட்டு முழுமையாக் தவிர்ந்திருப்பது.

12  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வரலாற்றை முழுமையாக ஒரு தடவை இந்த ரமலானில் படித்து முடிப்பது.

13  தொழுகைகளை ஜமாத்தோடும், முன் பின் ஸுன்னத்தோடும் நிறைவேற்றுவது.

14  நஃபிலான இபாதத்தில் ஈடுபடுவ‌து ம‌ட்டும‌ல்லாம‌ல், ப(F)ர்ளான, வாஜிபான விஷயங்களில் மிக கவனமாக  இருப்பது. (குடும்பத்தை கவனிப்பது, ஆபிஸ் வேலைகளில் கவனமாக இருப்பது வாஜிபாகும்.)

Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham