துஆ என்பது ஒரு வணக்கமாகும். ஒவ்வொரு அடியானும் அல்லாஹ் தஆலாவிடம் நேரடியாகத் தமது கஷ்ட நஷ்டங்களை முறையிட்டு அதற்கான பரிகாரங்களைப் பெற்றுக் கொள்ளும் ஒரு ஆயுதமாகும். ஒரு மனிதர் இக்;லாஸ், இறையச்சம், அல்லாஹ் ஏற்றுக் கொள்வான் என்ற உறுதி போன்ற பண்புகளை உள்ளடக்கிய நிலையில் மன்றாடி அல்லாஹ்விடம் கேட்கும் பொழுது நிச்சயமாக அல்லாஹ் கபூல் செய்வான்.
ஏனெனில், அல்லாஹுத் தஆலா அல்-குர்ஆனில் ‘உங்கள் அல்லாஹ் கூறுகின்றான். நீங்கள் உங்களுக்கு வேண்டியவை அனைத்தையும் என்னிடமே கேளுங்கள். நான் உங்களுடைய பிரார்த்தனையை அங்கீகரித்துக் கொள்வேன். எவர்கள் என்னிடம் கேட்காது பெருமையடிக்கின்றனரோ, அவர்கள் நிச்சயமாக சிறுமைப்பட்டவர்களாக நரகம் புகுவார்கள்.’ (40 : 60)
அதே துஆவை அவன் தொழுகையில் கேட்கும் பொழுது இன்னும் ஏற்றுக்கொள்ளப்படுவது உறுதியாகின்றது. மேலும், அதே துஆவைக் கூட்டாகத் தொழுது அனைவரும் ஒன்றிணைந்து அல்லாஹ்விடம் கேட்கும் பொழுது நிச்சயமாக அல்லாஹ் மிகவும் அவசரமாக ஏற்றுக் கொள்வான் என்பதில் சந்தேகம் இல்லை.
தொழுகையில் கூட்டாக அனைவரும் ஒன்றிணைந்து முஸ்லிம்களுக்கு ஏட்பட்டிருக்கும் கஷ்டம் பிரச்சினைகளைப் பச்சாதாபப்பட்டு ஒன்றாக் கேட்கும்பொழுது நிச்சயமாக அல்லாஹ் கபூல் செய்வான் என்ற காரணத்தினாலேயே, குனூத் அந்-நாஸிலா தொழுகையில் சுன்னத்தான அமலாக ஆக்கப்பட்டுள்ளது.
குனூதுன் நாஸிலா என்பது அச்சம், பயம், பஞ்சம், வரட்சி போன்றவை ஏற்படும் போது அவை நீக்குவதற்காக கேட்கப்படும் துஆவாகும்.
பர்ளான சகல தொழுகைகளிலும் ருகூவிற்குப் பின்னால் ஓதப்படும் இந்த மேற்குறிப்பிடப்பட்ட பிரச்சினைகள் போன்றவை நீங்கும்வரை ஓதுவது சுன்னத்தாகும். நபிலான தொழுகைகளிலும் ஒதுவதற்கும் அனுமதியுள்ளது.
பொதுவாக குனூத் அந்நாஸிலாவில், சந்தரப்பத்திற்கு ஏற்ப மிகவும் சுருக்கமாக எவ்வித துஆக்களையும் ஓதி ஸலவாத்துடன் முடித்துக்கொள்ளலாம். என்றாலும், ஷாபிஈ மத்ஹபில் பஐ;ர் தொழுகைக்குப் பின்னால் அல்லாஹும் மஹ்தினா பீமன் ஹதைத்… என்று வழமையாக ஓதப்படும் துஆவை ஓதியபின், சந்தர்ப்பச் சூழ்நிலைக்குத் தேவையான ஒரு சில துஆக்களைத் தெரிவு செய்து ஓதுவது சுன்னத்தாகும்.
இந்த குனூத்துன் நாஸிலாவை மிக நீளமாக ஓதி மஃமூம்களைச் சலிப்படைய வைக்காமல் மிகவும் சுருக்கமாக ஓதுதல் வேண்டும். பர்ளான தொழுகைகளைக்கூட சுருக்கமாக அமைத்துக்கொள்ளுதல் வேண்டும் என்பது நபிவழியாகும். நபியவர்களது குனூத்துன் நாஸிலாவும் மிகவும் சுருக்கமாக இருந்துள்ளது.
தற்கால சூழ்நிலைக்கேற்ப சில துஆக்களை இங்கு தருகின்றோம். அவற்றை ஒவ்வொரு பள்ளிவாசல் இமாம்கள் உட்பட அனைவரும் மனனமிட்டு குனூத்தில் ஓதிவருமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக்கொள்கின்றது.
Post a Comment