கண்டி மஹய்யாவையில் முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான பேக்கரி பெரும்பான்மை இனத்தவர் ஒருவரால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. பேக்கரி உரிமையாளரும் தாக்கப்பட்டுள்ளார்.
இன்று புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ள இச்சம்பவம் பற்றி தெரிவிக்கப்படுவதாவது, பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தான் பேக்கரிக்கு சென்ற போது உரிமையாளர் கையைப் பிடித்து இழுத்ததாக தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்தே கணவர் இத்தாக்குதலை நடத்தியுள்ளார். பேக்கரி கண்ணாடிகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
கண்டி உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் கண்டி பொலிஸ் தலைமை அலுவலக பொலிஸ் பரிசோதகர் என்போர் ஸ்தலத்துக்கு விஜயம் செய்து தாக்குதல் நடத்தியவரதும் பேக்கரி உரிமையாளரினதும் வாக்கு மூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.
பொலிஸாரினால் மேலதிக விசார ணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Post a Comment