முஜிபுர் ரஹ்மானிடம் 5 மணி நேரம் புலனாய்வு பிரிவினர் விசாரணை
Wednesday, June 25, 20140 comments
அல் கைதா, ஜிஹாத் மற்றும் தலிபான் போன்ற அமைப்புக்கள் இலங்கையில் உள்ளதா எனவும் அதனுடன் தொடர்புகளை பேணுகிறீர்களா எனவும் ஐக்கிய தேசிய கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் 5 மணிநரமாக விசாரணை செய்துள்ளனர்.
கடந்த 19 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட ஹர்த்தால் தொடர்பிலான விசாரணைகளுக்கக நேற்று கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலமையகத்துக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டே மேற்கண்டவாறு விசாரணை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை நாடளாவிய ரீதியில் முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பின் அழைப்பின் பேரில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. இந் நிலையில் அவ்வாறு ஹர்த்தால் அனுஷ்டித்தது ஏன் எனவும், அப்படி அனுஷ்டிக்க யார் உத்தரவு கொடுத்தார் எனவும் எதற்காக அனுஷ்டித்தீர் எனவும் முஜிபுர் ரஹ்மானிடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை செய்துள்ளனர்.
அளுத்கம, பேருவளை பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைகளுக்கு காரணமானவர்கள் சுதந்திரமாக நடமாடும் நிலையில் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காததாலேயே தாம் ஹர்த்தால் அனுஷ்டித்ததாகவும் யாரின் தேவைக்காகவும் இதனை செய்யவில்லை எனவும் முஜிபுர் ரஹ்மான் இதன் போது புலனாய்வுப் பிரிவினருக்கு தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்தே அல் கைதா உள்ளிட்ட ஜிஹாத் அமைப்புக்களின் பெயரை சுட்டிக்காட்டி அவற்றுடன் தொடர்பு உள்ளதா என புலனாய்வுப் பிரிவினர் விசாரணை செய்துள்ளனர்.
அத்துடன் வெள்ளவத்தை பகுதியில் தனியார் ஆடையகம் ஒன்றை ஹர்த்தாலுக்கக மூடுமறு வற்புத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ஐவரையும் தெரியுமா எனவும் அவர்கள் உங்கள் உத்தரவின் பேரிலா செயற்பட்டார்கள் எனவும் விசாரணை செய்துள்ள புலனாய்வுப் பிரிவினர் முஸ்லிம் உரிமைகளுக்கன அமைப்பு மற்றும் அதன் செயற்பாடுகள் குறித்தும் விசாரித்துள்ளனர்.
எவ்வாறாயினும் இலங்கையில் அல் கைதா உள்ளிட்ட எந்தவொரு ஜிஹாத் அமைப்பும் இலங்கையில் இல்லை எனவும் அவற்றுடன் தமக்கு எவ்வித தொடர்பும் இல்லை என புலனாய்வுப் பிரிவினரிடம் தெளிவாக தம் தெரிவித்ததாகவும் ஹர்த்தால் மேற்கொள்ளப்பட்டமைக்கன காரணம் மற்றும் முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பின் செயற்பாடுகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் அவர்களிடம் எடுத்துக் கூறியதாகவும் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டார்.
Post a Comment