பொது பல சேனாவை கண்டித்து கனடாவில் ஆர்ப்பாட்டம்
Monday, June 23, 20140 comments
இலங்கையில் பொது பல சேனாவினால் முஸ்லீம்களுக்கு எதிராக கட்டவிழத்து விடப்பட்டுள்ள தாக்குதல்கள் மற்றும் வன்முறைகளுக்கு எதிராக கனடாவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
கனடாவின் தலைநகர் ரொறன்ரோவில் இடம்பெற்ற இந்தக் கண்டன ஆர்ப்பட்டத்தை இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து கனடவில் வசிக்கும் தமிழ் மக்களும், முஸ்லீம் மக்களும் இணைந்து நடத்தியுள்ளனர்.
ஸ்காபுரோ நகரின் செப்பார்ட் - மார்க்கம் பகுதியில் நேற்று ஞாயிறன்றுக் கிழமை (22.06.14) நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தமது அதிருப்தியையும் - எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர்.
இலங்கை அரச அடக்குமுறைககு எதிராக, கனடாவில் முஸ்லீம்கள், ஈழத்தமிழர்களுடன் இணைந்து நடத்திய - முதல் நிகழ்வாக இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment