அளுத்கம - தர்கா நகர், பேருவளை மற்றும் வெலிப்பனை போன்ற இடங்களில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து முஸ்லிம் உரிமைகள் அமைப்பு நாடுதழுவிய ரீதியில் பூரண -ஹர்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பே இந்த ஹர்தாலுக்கான அழைப்பை விடுத்தது. அவ்வமைப்பின் தலைவரும் மேல்மாகாண சபை ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மான் இதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டிருந்தார்.
இந்த ஹர்தாலுடன் மனோ கனேஷன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி, விக்கிரமபாகு கருணாரட்ன தலைமையிலான நவ சமசமாஜ கட்சி, மேல்மாகாண சபை ஐ.தே.க. உறுப்பினர் பைறூஸ் ஹாஜியார், மு.க. உறுப்பினர் அர்ஷாட் நிஷாமுதீன் மற்றும் மத்திய மாகாண சபை ஐ.தே.க. உறுப்பினர் அசாத் சாலி ஆகியோர் ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் முஸ்லிம் காங்கிரஸும் இதற்கு ஆதரவளிப்பதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது நாடுதழுவிய ரீதியில் ஹர்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.
கொழும்பு மாவட்டம்
கிராண்ட்பாஸ் பகுதியில் முழுமையாக முஸ்லிம் கடைகள் முழுமையாக பூட்டப்பட்டிருக்கிறது. அத்தோடு இவ் ஹர்தாலின் போது தமிழ் கடைகளும் பூட்டப்பட்டு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.புதக்கடையில் உள்ள வியாபார நிலையங்கள் முழுமையாக பூட்டப்பட்டு வெரிச்சோடி போயுள்ளது.
விபரங்கள் தொடர்ச்சியாக இந்த செய்தியுடன் இணைத்து பதிவேற்றப்படும்......
Post a Comment