அளுத்கமை- தர்கா நகர்- பேருவளை பகுதிகளில் தொடர்ந்தும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கின்றது. எனினும் அங்கும் தொர்ந்தும் அச்சநிலை காணப்படுகின்றது. இன்று கா
நகர் பகுதிகளில் பாதுகாப்பு தரப்பினரும் சிங்களவர்களும்
தற்போதும் அளுத்கமை- தர்கா நகர்- பேருவளை நகரப்பகுதிகளில் பொலிஸும் இரானுவமும் விஷேட அதிரடி படையினரும் குவிக்கப்பட்டிருக்கின்றனர். அங்கு முஸ்லிம்களின் நடமாட்டத்தை காண முடியாவிட்டாலும் சிங்கள இளைஞர்கள் தடிகளுடனும் வால் மற்றும் இரும்புக்கம்பிகளுடனும் இருக்கின்றனர்.
ஆவேசத்துடன் சிங்கள கிராமங்கள்
சிங்கள பகுதிகளிலும் சிங்கள பெண்கள் சிறுவர்கள் இளைஞர்கள் என வயது வித்தியாசமின்றி வீதியோரங்களில் குழுமி நிற்கின்றனர். அவர்கள் ஆவேசத்துடனும் வெறியுடனும் கைகளில் தடிகளுடன் காணக்கூடியதாக இருந்தது.கண்ணீர் சிந்தும் முஸ்லிம் கிராமங்கள்
தர்கா நகர், போருவளை, சினன்கோட்டை உள்ளிட்ட முஸ்லிம கிராமங்களுக்கும் சென்றுவர முடிந்தது. இதன்போது முஸ்லிம் கிராமங்களுக்குள் மக்கள் பெரும் பீதியுடன் இருந்ததை காண முடிந்தது. சில இளைஞர்கள் வீடுகளின் வாசல்களில் இருந்து வீதியை பார்த்தவாறு இருந்தனர். பெண்களும் சிறுவர்களும் மிகவும் அச்சத்துடன் கண்ணீர் சிந்திக்கொண்டிருந்தனர்.இடம்பெயர்ந்தோரின் ஓலக்குரல்
அம்போபிட்டிய மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் நேற்று இரவு ஜாமிஆ நளீமியா கலாபீடத்தில் தஞ்சம் புகுந்திருந்தனர். எனினும் தற்போது அவர்கள் பேரவளை சீனன்கோட்டை ஹுமைஸரா தேசிய பாடசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அங்கு பலரின் ஓலக்குரல்களும் எமது கண்களை ஈரமாக்கின.'எனது பிள்ளையை இழந்துவிட்டேனே...!!!' என உயிரிழந்த 37 வயதுடைய இளைஞனித் தாய் கதரியழுதால்.
'விஷேட அதிரடி படையினரும் எம்மை தாக்கினர்' என்று ஒருபெண் மிகுந்த வருத்தத்துடன் அளுகிறார்.
'எம்மை தாக்ககினர். நாமும் தாக்க முயன்றோம். முடியவில்லை. திரும்பிய போது போத்தல் என் முகத்தில் பட்டது' என முகத்திய் காயத்துடன் தையல் போடப்பட்ட இளைஞன் கூறுகின்றான்.
இப்படி பல குரல்கள் எம்மை சங்கடத்துக்குள்ளாக்கியது. கலவரப் பிரதேசத்திற்குள் அதிக நேரம செலவிட முடியவில்லை உடனே அலுவலகம் திரும்பினோம்.
Post a Comment