முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட ஹர்தாலின் போது வெ ள்ளவத்தை பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள நோலிமிட்டை மூடும்படி கூறிய முஸ்லிம் இளைஞர்களை வெ ள்ளவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஹர்த்தால் விவகாரம் தொடர்பில் சம்பவ தினமன்று வெள்ளவத்தை நோலிமிட் நிர்வாகம் குறத்த பொலிஸ் பிரிவில் செய்த முறைப்பாட்டையடுத்து கைது செய்யப்பட்ட ஐவரையும் குற்றப்புலனாய்வு பிரிவிடம் வெள்ளவத்தை பொலிஸர் நேற்று (22.06.2014) ஒப்படைத்தனா்.
அதில் முஹம்மத் றிஸான் நேற்று பி.ப. 5.00 மணியளவில் நீதவான் முன் ஆஜா்படுத்தப்பட்டு எதிர்வரும் 27 ஆம் திகதி வரை கொழும்பு வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டுள்ளர்.
குற்றப்புலனாய்வு பிரிவு ஏனைய நால்வரையும் இன்று புதுக்கடை நீதிமன்றத்திற்கு ஆஜா்படுத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி ஜனநாயக ரீதியில் மிகவும் அமைதியாக இடம்பெற்ற இந்த ஹா்த்தாலின் செய்தி சா்வதேசம் வரை சென்றிருந்தது. இது அரசங்கத்திற்கு பேரிடியாக அமைந்துள்ளது. எனவே ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தவர்களை ஒடக்கும் வகையில் இவ்விவகாரத்தை அரசு பெரிதாக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
Post a Comment