வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியம்; ஆரம்பமாக தயா கமகே 10 இலட்சம் ரூபா
Monday, June 23, 20140 comments
இனவாதிகளின் வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட தர்கா நகர், அளுத்கம, பேருவளை, வெலிப்பனை, துந்துவ மக்களுக்கு அரசாங்கம் உதவிகளை செய்யம் என்ற நம்பிக்கையின்மையால் ஐக்கிய தேசிய கட்சியினர் மக்களுக்கு உதவும் முகமாக நிதியம் ஒன்றை ஆரம்பிக்கும் யோசினையை முன்வைத்தனர். கிழக்குமாகாண சபை உறுப்பினரும் ஐ.தே.க.வின் தேசிய அமைப்பாளருமான தயாகமகே தனது சொந்த நிதியிலிருந்து இதற்கு ஆரம்பமாக 10 இலச்சம் ரூபாவை தருவதாகவும் கூறினார்.
ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய, பாராளுமன்ற உறுப்பினர்களான ஹெரான் விக்கிரம ரட்ன, மங்கள சமரவீர, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தயா கமகே ஆகியோர் சென் று பார்வையிட்டனர். மேல்மாகாண சபை உறுப்பினர் இப்திகார் ஜெமீல் இதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று மஃரிப் தொழுகைக்கு பின்னர் வெலிபிடிய பள்ளிவாசலுக்கு வந்து மக்கள் சந்திப்பை மேற்கொண்ட போதே தயா கமகே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தர்கா நகரில் இனவாத கும்பலினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நட்ட ஈடு தருவதாக கூறியுள்ளது. எனினும் அதில் நம்பிக்கை இல்லை. இவர்கள் பல உறுதிமொழிகளை வழங்கியுள்ளது. எனினும் எதனையும் நிறைவேற்றியது கிடையாது. இம்மக்கள் இழந்தவை அதிகம். அதற்கான இழப்புகளை ஈடுசெய்யமுடியாது. எனவே நாம் புதிதாய ஒரு நிதிதியத்தினை உருவாக்க வேண்டும். அதற்கு நான் முதலாவதாக 10 இலச்சம் தருகிறேன். அத்தோடு எனது முஸ்லிம் வர்த்தகர்களுக்கும் இதில் இணைந்துகொள்ள அழைப்பு விடுக்கிறேன் என்றார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment