காவியுடை தரித்தவர்கள் குற்றவியல் சட்டத்தின் கீழ் தவறிழைத்தவர்களாக கண்டறியப்பட்டவர்கள். அதன் பின்னரும் தொடர்ந்தும் காவியுடை தரித்தவர்களாக இருப்பது பௌத்த தர்மத்தின் வீழ்ச்சிக்கு அடித்தளமாக அமைந்துள்ளது என பௌத்தசாசன மத அலுவல்கள் பிரதியமைச்சர் கே.டி.எஸ். குணவர்த்தன நேற்று சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது ஐ.தே.கட்சி எம்.பி. புத்திக பத்திரவினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் நிலையிலேயே மேற்கண்டவாறு பிரதியமைச்சர் குணவர்தன தெரிவித்தார்.
பிரதியமைச்சர் சபையில் தொடர்ந்து பதில் அளிக்கையில்,
காவியுடை தரித்தவர் ஒருவர் ஒழுக்கத்தை மீறுவதானால் ஒட்டுமொத்த பௌத்த குருமார் சமூகமே இழிவு நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
ஒழுக்கத்தை மீறல் மற்றும் ஒழுக்க குற்றவியல் சட்டங்களின் கீழ் தவறிழைத்தவர்கள் காவியுடை தரித்தவர்களாக தொடர்ந்தும் இருப்பது பௌத்த சாசனத்தின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளது.
எனவே, ஒழுக்க மீறல்களில் ஈடுபடுகின்ற காவியுடை தரித்தவர்களை பௌத்த சானத்திலிருந்து வெளியேற்றும் அதிகாரம் அந்தந்த மதப்பிரிவுகளின் சங்க சபைக்கோ அல்லது மகா நாயக்க தேரர்களுக்கோ இல்லை.
பௌத்த சாசனத்தின் மேம்பாட்டுக்காகவும், ஒழுங்காற்று நடத்தை கொண்ட காவி உடை தரித்தவர்கள் தொடர்பில் செயலாற்றுவதற்காகவும் 2004 ஆம் ஆண்டு பதிவு செய்தபோது அதற்கான சட்டமூலமொன்று எமது ஆட்சிக் காலத்தில் தயாரிக்கப்பட்ட போதிலும் பாராளுமன்றத்தில் இன்று வரை அது சமர்ப்பிக்கப்படவில்லை.
மேற்படி பிரிவு செய்தலின் ஊடாக பௌத்த கலாசாரத்தை மேம்படுத்தவும் ஒழுக்க மீறல் நடத்தை கொண்ட காவியுடை தரித்தவர்களின் செயல்களைக் கட்டுப்படுத்தவும் முடியும் என்றும் தெரிவித்தார்.
Post a Comment