செக்ஸ் மனித வாழ்வியலில் இருந்து பிரிக்க முடியாத இயற்கையான சுக அனுபவம், இறைவனால் மனிதனுக்கு கொடுக்கப்பட்ட மிகப் பெரிய வரப்பிரசாதம். இரு உடல்கள் இணையும் பொது மனிதனுக்கு மிகப் பெறும் திருப்தி கிடைக்கும் வகையில் இறைவன் வடிவமைத்துள்ளான்.
ஆனால் இன்று இது ஒரு மிகப் பெரிய யுத்தமாக மாறிவிட்டது சமூகத்தில் மிகவும் இழிவான செயலாக பார்க்கும் அளவுக்கு மனித செயற்பாடுகள் கேவலமாக மாறிவிட்டன. இன்று நாட்டிலும் சரி சர்வதேச உலகிலும் சரி சிறுவர் துஷ்பிரயோகம், பாலியல் வன்புணர்ச்சி என பல தோரனைகளில் மனிதன் மிருகங்களை விட கேவலமாக மாறிவிட்ட நிலையை ஒவ்வொரு நாளும் செய்தித்தாள்களும், செய்திச்சேவைகளும், இணையத்தளங்களும் நமக்கு அடையாளப்படுத்தி;க் கொண்டே இருக்கின்றன.
இந்த நிலைக்காண காரணம் என்ன? செக்ஸ் பற்றி இன்று மக்கள் மத்தியில் கொடுக்கப்பட்டுள்ள புரிதல் தான் இவ்வாறான செயற்பாடுகளுக்காண காரணமாக அமைகின்றன.
இன்று செக்ஸ் கல்வியை மையப்படுத்திய புதியதோர் பார்வையை மக்களுக்கு மத்தியில் கொண்டு செல்லப்பட வேண்டியுள்ளது, புதிய உரையாடல் தளங்கள் திறந்து வைக்கப்பட வேண்டியது காலத்தின் தேவை.
மறைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு விடயத்தைப் பற்றி தான் மனித மனம் எப்போதும் தேடும் ,இவ்விடயம் மறைக்கப்பட்டு பயங்கரமான விடயமாக சித்தரிக்கப்பட்டதால் தான் மனித உணர்வுகள் அத்துமீரி கோரமான மனிதாபிமானமற்ற செயல்களாக சமூகத்தில் அரங்கேரிக் கொண்டிருக்கின்றன.
ஆனால் ஒரு பொதுத்தளத்தில் உரையாடப்பட்டு பிரம்மாண்டமான விடயமாக காட்டாமல் அது ஒரு இயற்கையின் செயற்பாடே தவிற வேறேதும் இல்லை என்ற மனோநிலை சார் மாற்றங்கள் உருவாக்கப்பட்டால் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
எமக்கான சுய அடையாளங்களை மறந்து மேற்கைப் போன்று ஒரு நிர்வாணக் கலாசாரத்தை தோற்றுவிக்க வேண்டும் என்பதல்ல எனது வாதம். செக்ஸ் பற்றி பாரம்பரிய ரீதியாக கொடுக்கப்பட்டுள்ள கட்டமைப்பில் ஒரு தகர்ப்பைக் கொண்டு வந்து செக்ஸ் கல்வியில் அதன் யெதார்த நிலையை சமூகத்தில் வெளிப்படையான உரையாடலுக்கு கொண்டுவர வேண்டும்.
பாலியல்வன்செயல்களுக்கான தீர்வுகள் பாதுகாப்புக்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். செக்ஸ் என்றால் அது பயங்கரமான விடயமாகவோ அல்லது ஒரு வயது வந்த பிள்ளையால் அது என்ன விடயம் அதன் யதார்த்தம் என்ன? என்று புரியாமல் இருக்கும் நிலையை விட்டு மாற்றம் கொண்டு வரவேண்டும்.
சில புனிதப்படுத்தல்கள் கூட சமூகப் பிரச்சினைகளுக்கு வழி அமைக்கின்றன. ஒவ்வொரு சமூகத் தளத்திலும் இந்த விடயம் வித்தியாசமான வடிவில் உரையாடப்பட வேண்டும். நபி(ஸல்) அவர்களது சமூகத்திலும் இவ்விடயம் உரையாடப்பட்டமைக்கான வரலாற்றுச்சான்றுகள் உள்ளன. ஒரு பிரச்சினையை தீர்ப்பதற்கு அங்கு உரையாடல்கள் ஆரம்பிக்கப்படாத வரைக்கும் பிரச்சினைகளுக்கான புதிய தீர்வகளோ புதிய பார்வைகளோ என்றுமே தோற்றம் பெறாது.
Post a Comment