ஒரு சில முஸ்லிம் அமைப்புகளின் கருத்துக்களை வைத்து ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் தண்டிக்கக்கூடாது. பௌத்த மதத்தை அவமதித்தமைக்கு ஸ்ரீலங்கா தௌபீக் ஜம்ஆத் முழு பௌத்த மக்களிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்தார்.
முஸ்லிம் மக்களை அவமதித்து முஸ்லிம் மதத்தை இழிவுப்படுத்தும் செயற்பாட்டிற்கு பொதுபலசேனாவுக்கும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால், அரசாங்கம் வேடிக்கை பார்க்கிறது எனவும் அவர் குற்றம் சுமத்தினார்.
ஸ்ரீலங்கா தௌஹீத் ஜம்ஆத் அமைப்பு முஸ்லிம் மார்க்கத்திற்கு எதிராக செயற்படுகின்றதென்பதை நாம் ஆரம்பம் ஒரு மதத்தை இழிவுப்படுத்தி பேசுவதை முஸ்லிம் மார்க்கத்தில் ஒருபோதும் குறிப்பிடப்படவில்லை. எனினும் தௌஹீத் ஜம்ஆத் அமைப்பு இதனையே செய்து வருகின்றது. எனவே, இவர்களின் இந்த செயற்பாட்டிற்கு மன்னிப்புக் கேட்டே ஆகவேண்டும்.
மேலும், முஸ்லிம் அமைப்புகளுக்கு விதிக்கப்படும் அதே கட்டுப்பாட்டினை பௌத்த தீவிரவாத அமைப்புக்களுக்கும் விதிக்கப்பட வேண்டும். பொதிபலசேனா பௌத்த அமைப்பினர் தற்போது கையாளப்படும் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் உடனடித் தீர்வினைக் காணப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
Post a Comment