தம்புள்ளை பள்ளிவாசலின் ஒருபகுதி இடிக்கப்பட்டது!
Wednesday, May 7, 20140 comments
சர்வதேச மட்டத்தில் பெரும் கவனயீர்ப்பைப் பெற்ற தம்புள்ளை பள்ளிவாசலின் ஒருபகுதி நேற்றிரவு வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளால் இடிக்கப்பட்டுள்ளது.
மேலும் பள்ளிவாசல் கட்டடத்தை அண்டிய கட்டடங்கள் பாதை அபிவிருத்திக்காக பெக்கோ இயந்திரங்கள் மூலம் அகற்றப்படுவதாகவும், பெக்கோ இயந்திரங்கள் பள்ளவாசலை அண்டியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இவற்றை பொலிசாரின் பாதுகாப்புடன் இனாமளுவே சுமங்கல தேரர் நேரடியாக நின்று வழிநடத்தி வருவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புனித பூமி அபிவிருத்தி என்ற பெயரில் தம்புள்ளைப் பள்ளிவாசலை ஊடறுத்துச் செல்லும் வகையில் வீதியொன்றை திட்டமிட்டு, தற்போது பள்ளிவாசலின் இரு மருங்கிலும் இயந்திரங்களைக் கொண்டுவந்து நிறுத்தியுள்ளதாக அப்பள்ளிவாசல் நிருவாக சபைச் செயலாளர் றஊப் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பள்ளிவாசல் பராமரிப்பாளர் (கதீப்) பயன்படுத்தும் மலசலகூடம் மற்றும் அதனைத் தொடர்ந்துள்ள கட்டிடங்கள் தற்போது தகர்க்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் பள்ளிவாசலைத் தகர்க்காமல் வீதியை வளைத்துக் கொண்டு போவதாக வீதி அதிகார சபை அதிகாரிகள் மற்றும் பொலிஸார் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.
எனினும் இன்று அதிகாலைக்குள் அப்பிரதேசத்திலிருந்து பள்ளிவாசலை இடித்து தரைமட்டமாக்கிவிடும் வகையில் இனாமளுவே சுமங்கல தேரரின் நடவடிக்கைகள் அமைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
Post a Comment