ஷஃபான் தலை பிறை இன்று பாருங்கள் - பிறை குழு

Thursday, May 29, 20140 comments


புனித ஷஃபான் மாதத்தின் தலைப்பிறை யைத் தீர்மானிக்கும் மாநாடு இன்று வியாழக்கிழமை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.

வியாழக்கிழமை மஃரிப் தொழுகை நேரமாகிய 6.23 மணிமுதல் புனித ஷஃபான் மாதத்திற்கான பிறையைப் பார்க்குமாறு பிறை குழு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறும் இம்மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, பள்ளிவாசல் கதீப்மார்கள், உலமாக்கள், முஸ்லிம் சமய கலாசார திணைக்களப் பிரதிநிதிகள், ஷரீஆ கவுன்ஸில், மேமன், ஹனபி பள்ளிவாசல்களின் நிர்வாக சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

தலைப்பிறையைக் கண்டவர்கள் 0112432110, 0115234044, 0112390783, 0777316415 ஆகிய தொலைபேசியுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்படு கின்றனர். -
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham