கம்பஹா மாவட்டம் முழுதும் மாட்டிறைச்சிக்கு தடை வரலாம்
Sunday, May 11, 20140 comments
கம்பஹா மாவட்டத்தில் கால்வாய் நோய் பரவும் அபாயம் காணப்படுவதால், இந்த மாவட்டத்திற்குள் கால்நடைகளை கொண்டு செல்வதற்கு, விசேட அனுமதிப்பத்திரங்களை பெறவேண்டுமென, கம்பஹா மாவட்ட சுகாதாரத்திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை இம் மாவட்டத்தில் மாட்டிறைச்சி விற்பனைக்கும் தடை ஏற்படலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, கால்நடை உரிமையாளர்களுக்கு, சுகாதாரத் திணைக்களம் அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளது.
இதற்காக விசேட அனுமதிப்பத்திரங்கள் தற்போது வழங்கப்பட்டு வருவதாகவும், கால்நடை சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர் ஏ.சிவசோதி தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது;
இந்நோயினால் கண்டி, அநுராதபுரம், புத்தளம், மன்னார் ஆகிய மாவட்டங்களில் கால்நடைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த வருடம் டிசம்பர் மாதமளவிலேயே இந்த நோய் பரவ ஆரம்பித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் வரை இந்நோயினால் 14,800 கால் நடைகள் பாதிக்கப்பட்டதோடு இதில் 330 மாடுகள் வரை இறந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Post a Comment