ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் குண்டு புரளி கிளப்பியவருக்கு சிறை
Thursday, May 1, 20140 comments
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் குண்டு இருப்பதாக புரளியை கிளப்பிய பிரித்தானிய பிரஜைக்கு மூன்று ஆண்டு கால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 20ம் திகதி கொழும்பில் இருந்து லண்டன் சென்ற ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் குண்டு இருப்பதாக புரளியை கிளப்பியமைக்காக எலன் படேய் என்ற பிரித்தானியரும், மேலும் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் 49 வயதான எலன் படேய் என்பவர் மீது குற்றம் சுமத்தப்பட்டதுன், மற்றையவர் நிரபராதி என விடுவிக்கப்பட்டார்.
குறித்த அவரது வழக்கின் தீர்ப்பு நேற்று (30) வழங்கப்பட்ட போதே இந்த தண்டனை விதிக்கப்பட்டது.
Post a Comment