பாராட்டப்பட வேண்டிய விடயத்தில் சமூகம் கஞ்சத்தனம் காட்டக்கூடாது- அகார் முஹம்மத்
Thursday, May 1, 20140 comments
பாராட்ட வேண்டியவர்களை பாராட்டுமளவிற்கு பாராட்டுவது மிக முக்கியமானது. இது முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையாகும். எனவே முஸ்லிம் சமூகம் பாராட்டப்பட வேண்டிய விடயத்தில் கஞ்சத்தனம் காட்டக்கூடாது என ஜாமியா நளீமிய்யா கலாபீடத்தின் பிரதிப்பணிப்பாளர் ஏ.ஸீ. அகார் முஹம்மத் தெரிவித்தார்.
பேருவளை சீனன்கோட்டை நளீம் ஹாஜியார் மகளிர் கல்லூரியில் ஓய்வுபெற்றுச் செல்லும் அதிபர் நூர்ஹலீமா நஜீப்தீனின் சேவை நலன் பாராட்டு மற்றும் பிரியாவிடை நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
கல்லூரி மண்டபத்தில் அதிபர் பஹீமா பாரிஸ் கபூர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அசாத் முஹம்மத் தொடர்ந்தும் பேசுகையில்
ஒரு குடும்பத்தலைவியாக இருந்து கொண்டு சமூகத்திற்கு சிறந்த முன்மாதிரியாக தன்னை மாற்றியமைத்துக்கொண்டவர் ஓய்வு பெற்றுச்செல்லும் அதிபர். மார்க்க வரையறைகளை மீறாத வண்ணம் எவ்வாறு தொழில்புரியலாம் என்பதற்கு இவர் சிறந்த உதாரண புருஷர். மனிதனின் முன்னேற்றத்திற்கு தேவையான அடிப்படை அம்சங்களான பணிவு நன்றியுடன் நடந்து கொள்ளல் ஆகியன இன்று நடந்து கொண்டிருப்பது போற்றத்தக்கது என்றார்.
நிகழ்வில் எம்.எஸ். எம். அஸ்லம் எம்.பி மேல்மாகாண சபை உறுப்பினர் இப்திகார் ஜெமீல் முன்னாள் உறுப்பினர் ஏ.எம்.யூசூப் மேல்மாகாண உதவி கல்விப்பணிப்பாளர் ஏ.டப்ளியூ எம். அலவி உட்பட சீனன்கோட்டை பள்ளிச்சங்கம் பாடசாலை அபிவிருத்திச்சங்கம் என்பனவற்றின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
Post a Comment