பாதிப்புகள் இல்லாத இடத்தில் தம்புள்ளை பள்ளி அமைய வேண்டும்- அமைச்சர் பௌஸி
Sunday, May 11, 20140 comments
தம்புள்ளை பள்ளிவாசல் நிர்வாகம் மாற்றிடத்துக்கு இணங்கியிருந்தால் நகர அபிவிருத்தி அதிகார சபை தம்புள்ளையில் முஸ்லிம்களுக்கு வசதியான இடத்தில் காணி வழங்க வேண்டும். எதிர்காலத்தில் பாதிப்புகள் ஏதும் ஏற்படாத இடமாக அது இருக்க வேண்டும் என சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்எம். பௌஸி தெரிவித்தார்.
தம்புள்ளை ஹைரிய்யா பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலே அவர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், நீண்ட கால வரலாறு கொண்ட இந்தப் பள்ளிவாசல் பற்றி பல கருத்துக்கள் தொடராக தெரிவிக்கப்பட்டு வந்தன. இது ஒரு பள்ளிவாசல் இல்லை எனவும் தெரிவித்தார். மாற்றுக்காணி வழங்குவதாகவும் கூறினார்கள். பள்ளிவாசல் நிர்வாகம் மாற்றுக்காணி பெற்றுக்கொள்ள இணக்கம் தெரிவித்திருந்தால் அது உகந்தவோர் இடத்திலே வழங்கப்பட வேண்டும்.
மாநகர முதல்வர்கள் பேச்சுவார்த்தை நடத்தி இந்த தீர்மானத்துக்கு வந்துள்ளார்கள். இந்த தீர்மானம் எதிர் காலத்தில் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக இருக்கக் கூடாது.
பெரும்பான்மையினரின் சமய பெரஹராக்கள் நடைபெறும்போது பள்ளிவாசலுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றார்.
Post a Comment