தம்புள்ள பள்ளிவாசலுக்கு பாதுகாப்பு வழங்க - அரசாங்கம் உத்தரவாதம்
Sunday, May 11, 20140 comments
தம்புள்ள பள்ளிவாசலுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என அரசாங்கம் உத்தரவாதம் அளித்துள்ளது. குறித்த பள்ளிவாசலை இடித்து விடப் போவதாக அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவதாக பள்ளிவாசல் நிர்வாகத்தினர் முறைப்பாடு செய்துள்ளனர். கடந்த கால சம்பவங்களின் காரணமாக இவ்வாறு அச்சம் ஏற்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
பள்ளிவாசலுக்கு அருகாமையில் நிர்மானிக்கப்பட்டு வரும் புதிய கட்டிடம் காரணமாக இந்த அச்சம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். எனினும், பள்ளிவாசலுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என காவல்துறை மா அதிபரும், பிரதிக் காவல்துறை மா அதிபர் அனுர சேனாநாயக்கவும் தெரிவித்துள்ளனர்.
Post a Comment