13 வயது மாணவனை ஆசிரியர் ஒருவர் தண்ணீர் போத்தலினால் தலையில் தாக்கியதில் அம்மாணவன் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளார்.
கண்டி கல்வி வலயத்திற்குட்பட்ட தெல்தோட்டை பகுதியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
குறித்த ஆசிரியரால் நடனமாடுமாறு பணிக்கப்பட்ட போது சில மாணவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரம் கொண்ட ஆசிரியர் அலுமினிய போத்தலினால் மாணவர்களை தாக்கியதில் ஒரு மாணவன் படுகாயமடைந்துள்ளான்.
இது தொடர்பில் மாணவன் பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
இதேவேளை, தெல்தோட்டை தோட்ட பாடசாலை ஒன்றில் தரம் 8 இல் கல்வி பயிலும் மாணவி ஒருவர் பெண் அதிபர் ஒருவரினால் தகாத முறையில் மாணவர்கள் முன்னிலையில் தண்டிக்கப்பட்டார். இதனால் மன உளைச்சலுக்குள்ளான அம்மாணவி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

Post a Comment