மாவனெல்லையில் பள்ளிவாசலினை மூடுமாறு பொதுபலசேனா உத்தரவு

Thursday, May 29, 20140 comments


மாவனெல்லை, ஹெம்மாத்தகம வீதியிலுள்ள ஹெரமினியா தாருல் ஹிக்மா பள்ளிவாசலினை மூடுமாறு பொதுபலசேனா உத்தரவிட்டதாக குறித்த பள்ளிவாசலின் நிர்வாக சபையின் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகயுள்ளது.

பொதுபலசேனாவின் மாவனல்ல பிரதேச அமைப்பாளராக அல்பிட்டிய விகாரையின் பிரதான விகாராதிபதி மெதிரிகிரிய புன்கசர தேரர் தலைமையிலான குழுவினர் இன்று மாலை ஐந்து மணியளவில் குறித்த பள்ளிவாசலுக்கு விஜயம் செய்துள்ளனர்.

இதன்போதே இந்த பள்ளிவாசலினை மூடுமாறு அவர்கள் உத்தரவிட்டதாக பள்ளிவாசலின் நிர்வாகசபையினர் தெரிவித்தனர். இந்த பள்ளிவாசல் சட்டவிரோதமானது என தெரிவித்து மெதிரிகிரியபுன்கசர தேரர் ஏற்கனவே மாவனல்லை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

எனினும் குறித்த பள்ளிவாசல் சட்ட ரீதியானது என்பதற்கான ஆதாரங்களை பொலிஸாரிடம்சமர்ப்பித்துள்ளனர். இந்த நிலையிலேயே குறித்த தேரர் தலைமையிலான குழுவினர் இன்று பள்ளிவாசலுக்கு விஜயம் செய்து மூடுமாறு உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந்த சம்பவம் குறித்து மானவல்லை பொலிஸ் நிலையத்தில் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் முறைப்பாடு செய்துள்ளனர். குறித்த பள்ளிவாசல் வக்பு சபையில் ஏற்கனவே பதிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (விடியல்)
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham