ஜனாதிபதி - விமல் சந்திப்பு

Sunday, May 25, 20140 comments


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும், ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்சவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. விமல் வீரவன்ச 12 அம்ச யோசனைத் திட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைத்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களும், ஜே.என்.பி.யின் சிரேஸ்ட உறுப்பினர்களும் இந்த சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.

நாட்டின் நலனைக் கருத்திற் கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி, விமல் வீரவன்சவிற்கு உறுதியளித்துள்ளார். தமது யோசனைத் திட்டத்தை அமுல்படுத்த இலங்கை அரசாங்கம் இணங்காவிட்டால், ஆளும் கட்சியிலிருந்து விலகிக்கொள்ளப் போவதாகத் தெரிவித்துள்ளார். நல்லாட்சியை ஏற்படுத்தல், குற்றச் செயல்களை தடுத்தல், ஊழல் மோசடிகளை தடுத்த உள்ளிட்ட பல்வேறு யோசனைத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

குறித்த யோசனையில் உள்ளடங்கியுள்ள விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட உறுப்பினர்கள், பிரதி அமைச்சர் வீரகுமார திஸாநாயக்க, மொஹமட் முஸாமில் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham