அமைச்சர் சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஜாதிக ஹெல உறுமயவின் தூதுக்குழு ஒன்று சமூக நீதிக்கான தேசிய அமைப்பின் தலைவர் வண மாதுளுவாவே சோபித தேரரை நாளை சந்தித்துப் பேச்சுக்களை நடத்தவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை இல்லாதொழிப்பது தொடர்பகவே இந்தச் சந்திப்பின் போது முக்கியமாக ஆராயப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பது குறித்து மாததுளுவாவே சோபித தேரர் பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் ஏற்கனவே பேச்சுக்களை நடத்திவருகின்றார்.
பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. மற்றும் ஜே.பி.வி. என்பவற்றுடன் ஏற்கனவே அவர் பேச்சுக்களை நடத்தியுள்ளார். அதன் தொடர்ச்சியாகவே அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவுடன் அவர் இப்போது பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
"நாட்டில் சமூக நீதி, நல்லாட்சி, சட்டம்- ஒழுங்கு- ஜனநாயகத்தை உருவாக்கும் விடயங்களில் தேவையானபோது எமது உபாயங்களை மாற்றிக்கொள்வதற்குத் தயாராகவிருக்கின்றோம்" எனத் தெரிவித்த மாதுவாவே சோபித தேரர், ஐ.தே.க. மற்றும் ஜே.வி.பி. தலைவர்களுடன் தாம் ஆக்கபூர்வமான கருத்துப் பரிமாற்றங்களை ஏற்கனவே மேற்கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

Post a Comment