ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு தாயாராகும் பிரித்தானிய இலங்கை முஸ்லிம்கள்...!
Sunday, May 4, 20140 comments
பொது பல சேனாவுக்கு எதிராகவும் , கடும்போக்கு அமைப்புக்களை அரசாங்கம் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தியும் நாளை 05 திகதி லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு முன்னாள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பிரித்தானியா வாழ் இலங்கை முஸ்லிம்கள் மிக உணர்வு பூர்வமாக தமது குடும்பங்கள் சகிதம் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை மும்முரமாக செய்து வருகிறார்கள் .
சிலர் பிரித்தானியாவில் இதற்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்திய போதிலும் இலங்கையில் உள்ள முஸ்லிம் சமூகத்தின் பிரதான அமைப்புகளான ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் , தேசிய சூரா சவுன்சில் ஆகிய வற்றின் தலைவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை வரவேற்றுள்ள நிலையில் நாளைய ஆர்ப்பாட்டத்துக்கு பெரியளவில் இலங்கை முஸ்லிம்கள் கலந்து கொண்டு தமது எதிர்ப்பினை வெளிபடுதுவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.
திட்டமிடப் பட்டுள்ள இந்த நான்கு மணித்தியால ஆர்ப்பாட்டத்தின் ஊடாக பெளத்த கடும்போக்கு வாதிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் முஸ்லிம்கள் தெளிவான ஒரு செய்தியை முன்வைப்பார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது .
நாளை 05 திகதி இடம்பெறப் போகும் இந்த ஆர்ப்பாட்டம் பிரித்தானியா வாழ் இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் காலத்துக்கும் நேரத்துக்கும் அவசியமான ஒன்றாக கருதப்பட்டு பிரதான பேசும் பொருளாக மாறியுள்ளது .
இந்த ஆர்ப்பாட்ட பேரணி தொடர்பாக அதன் ஏற்பாட்டு குழு தெரிவிக்கும் தகவலில் மே 5ந் திகதி நண்பகல் 12.00 PM மணிக்கு அனைத்து சகோதர சகோதரிகளும் ஒன்றாக சந்தித்து தமது வருகையினை அறிவிக்கின்ற இடமாக லண்டனில் உள்ள Richmond Terrace வளாகமே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதற்குரிய முகவரி விபரம். Richmond Terrace, London, SW1A 2JL
அங்கு வந்து சேர்கின்ற அத்தனை மக்களோடும் சரியாக பிரித்தானிய நேரம் நண்பகல் 12.00PM மணிக்கு எம்முடைய பேரணி ஆரம்பிக்கும்.
மதியம் 1:30PM வரையான ஒன்றரை மணித்தியாலங்கள் அவ்விடத்திலேயே எம்முடைய அடையாள எதிர்ப்பை முன்னெடுத்துவிட்டு, அங்கிருந்து தொடர்ந்து இலங்கை உயர்ஸ்தானிகம் அமைந்துள்ள Hyde Park Gardens நோக்கி பேரணி நகரும்.
அங்கே நமது எதிர்ப்பினை முறையாக வெளிப்படுத்துவதற்காக வாகனப் போக்குவரத்துத் தடைகள் பொலிசாரினால் ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டதால் நாம் நமது எதிர்ப்புப் பேரணியை ஒழுங்கான முறையில் அங்கேயும் முன்னெடுக்கமுடியும்.
அதைத் தொடர்ந்து இறுதி மணித்தியாலத்தில் மீண்டும் அனைவரும் ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிட மற்றும் உரைகளை ஆற்றுவதற்கென சந்தித்த இடத்திலே ஒன்று சேர்ந்து நம்முடைய கருத்துக்களை வெளியிட்டு சரியாக பிற்பகல் 4:00PM மணிக்கு ஆர்ப்பாட்டப் பேரணி நிறைவடையும். என தெரிவித்துள்ளது.
Post a Comment