வெளிநாட்டு இஸ்லாமிய தீவிரவாதிகள் இலங்கையில் இயங்கி வருகின்றனர் – ரொஹான் குணரட்ன
Sunday, May 4, 20140 comments
வெளிநாட்டு இஸ்லாமிய தீவிரவாதிகள் இலங்கையில் இயங்கி வருவதாக சர்வதேச பயங்கரவாத ஒழிப்பு தொடர்பிலான பேராசிரியர் ரொஹன் குணரட்ன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சர்வதேச இஸ்லாமிய தீவிரவாதிகளின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும், இது ஒட்டுமொத்த பிராந்திய வலயத்திற்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அதிகாரிகள் பிராந்திய வலய பாதுகாப்பு தரப்பினருடன் இணைந்து இந்த தீவிரவாதச் சக்திகளை ஒடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அண்மையில் இந்திய புலானய்வுப் பிரிவினரால், பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ உளவுப் பிரிவிற்கும், அந்நாட்டு தீவிரவாதிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கிய இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டார். சாகீர் ஹூசெய்ன் என்ற கண்டியைச் சேர்ந்தவரே இவ்வாறு கைது செய்பய்பட்டார்.
இவ்வாறான பலர் இலங்கையில் இருக்கக் கூடுமென பேராசிரியர் குணரட்ன அச்சம் வெளியிட்டுள்ளார். இலங்கை இஸ்லாமிய இளைஞர்கள் தீவிரவாத பொறிக்குள் சிக்கி விடாது தடுப்பதற்கு நாட்டின் முஸ்லிம் தலைவர்கள் சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகின்றது என அவர் தெரிவித்துள்ளார். தமிழ்த் தலைவர்கள் விட்ட தவறுகளை முஸ்லிம் தலைவர்கள் விட்டுவிடக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராடுவதனை தமிழ் தலைவர்கள் தடுத்து நிறுத்தத் தவறியதாகவும், ஐக்கியமான இலங்கைக்குள் சுபீட்சமாக வாழ்வதன் முக்கியத்துவத்தை முஸ்லிம் இளைஞர்களுக்கு அதன் தலைவர்கள் தெளிவுபடுத்த வேண்டுமென ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.
Post a Comment