கொழும்பு மாநகர எல்லைக்குள் டெங்கு தொற்று அதிகரிப்பு
Sunday, May 4, 20140 comments
கடந்த ஏப்ரல் மாதம் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில், டெங்கு நோய் தொற்றானது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபையின் பிரதான மருத்துவ அதிகாரி பிரதீப் காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த மாதத்தில், இந்த டெங்கு நோய் தொற்றானது கிருலப்பனை பிரதேசத்திலே அதிகரித்து காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில், டெங்கு நோய் தொற்று காரணமாக, 360 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது, அந்த நோய் தொற்றானது 20 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதான மருத்துவ அதிகாரி பிரதீப் காரியவசம் சுட்டிக்காட்டியுள்;ளார்.
Post a Comment