அரசியலமைப்புக்கு புறம்பான பொலிஸ் பிரிவும் ஜனாதிபதியின் தவறும்: இனாமுல்லாஹ்விடமிருந்து...
Sunday, May 4, 20140 comments
இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு புறம்பாகவே மத விவகாரங்களைக் கையாளவென விஷேட பொலிஸ் பிரிவு அமைக்கப் பட்டுள்ளது.
பாராளுமன்றில் ஒரு திருத்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு மூன்றில் இரு பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றே இவ்வாறானதொரு ஏற்பாட்டை ஜனாதிபதி செய்திருக்க வேண்டும்.
அதிலும், இலங்கை பொலிஸ் படையின் ஒரு பகுதியினரை ஒரு அரசியல்வாதி அமைச்சராக இருந்து தனது அதிகார வரம்புகளுக்குள் வைத்திருப்பது மிகவும் ஆபத்தான முன்னுதாரணமாகும்.
போக்குவரத்து, கரையோர காவல், மகளிர்,சிறுவர் போன்ற இன்னோரன்ன விஷேட பிரிவுகள் பொலிஸ் தலைமையகத்தினதும் கட்டமைப்பினதும் கட்டுப்பாட்டின் கீழ் வருவது போல் மதம்பிடித்து மூர்க்கத்தனமாக அலையும் மத குருமார்களை கையாள ஒரு ஏற்பாட்டினைச் செய்திருந்தால் நியாயப்படுத்தியிருக்கலாம்.
ஏற்கனேவே சுதந்திர பொலிஸ் சேவை ஆணைக்குழுவை அமைத்து அரசியல் செல்வாக்குகளில் இருந்து சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுகின்ற காவல் துறையினரை அரசியல் தலையீடுகள் சுதந்திரமாக செயற்பட அனுமதிக்க வேண்டும் என அரசியலமைப்பின் மீதான 17 வது சட்டத்திருத்தம் (03/10/2001) கொண்டுவரப்பட்டது.
பின்னர் முஸ்லிம்காங்கிரசினது ஆதரவை பெற்று (09/09/2009) நிறைவேற்றப்பட்ட 18 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் 17 ஆவது திருத்தப் பிரேரணை வலிதற்றதாக ஆக்கப் பட்டதோடு இரண்டு முறைக்கு மேல் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக பதவியில் இருப்பவர் போட்டிபோடவும்..ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அரசியல் நோக்கங்களுக்காக, அல்லது தொடர்ந்தேர்ச்சியாக ஒருவர் அதிகரங்கலித் தக்க வைத்துக் கொள்வதற்காக இன மத மொழி விவகாரங்களை கையாள்வதோ அல்லது அந்த இலக்கில் பாதுகாப்பு படைகள்,காவல துறையினரை கையாள்வதோ எதேச்சதிகார ஜனநாயக விரோத செயற்பாடுகளாகும்.
Post a Comment