அஸாம் கலவரம்: பலியானவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்வு
Wednesday, May 7, 20140 comments
அஸாமில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து மேலும் 2 உடல்கள் மீட்கப்பட்டன. இதனையடுத்து அஸாம் கலவரத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது.
பாரப்பட்டா சாலைக்கு அருகே உள்ள பேக்கி நதியில் இருந்து ஏழு வயதான சிறுமி மற்றும் பக்ஸாவில் இருந்து 35 வயதான பெண்மணியின் உடல்கள் நேற்று கண்டெடுக்கப்பட்டது.
மரணித்தவர்களின் உடலில் காயமோ, தோட்டாத்தாக்கிய காயமோ இல்லை.போடோ தீவிரவாதிகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்கும் முயற்சியில் அவர்கள் மரணித்திருக்கலாம் என்று பொலிஸ் தெரிவித்துள்ளது.கலவரம் பாதிக்கப்பட்டபகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு பிறப்பித்த ஊரடங்கு உத்தரவை அதிகாரிகள் தளர்த்தினர்.
கொக்ராஜரில் ஆறு மணிநேரமும், பக்ஸா மற்றும் சிராங்கில் எட்டு மணி நேரம் வீதமும் ஊரடங்கு உத்தரவில் தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.புதிய தாக்குதல் சம்பவங்கள் குறித்து தகவல் இல்லை என்று போலீஸ் தெரிவித்தது.கலவரத்தில் 6 வனத்துறை அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தியைத் தொடர்ந்து மனித உரிமை ஆணையம் சுயமாகவே வழக்குப் பதிவுச் செய்துள்ளது.இச்சம்பவம் தொடர்பாக 45 தினங்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க மாநில அரசுக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.வனத்துறை அதிகாரிகள், கலவரக்காரர்களுக்கு தங்களுடைய ஆயுதங்களை வழங்கியதாக உள்ளூர்
ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
அஸாம் முஸ்லிம் மாணவர் யூனியன், பா.ஜ.க சிறுபான்மை பிரிவு,
சி.பி.ஐ(எம்.எல்) உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கலவரத்தை கண்டித்து பேரணி நடத்தின.குற்றவாளிகளை உடனடியாக சட்டத்தின் முன்னால் கொண்டுவரவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
Post a Comment