மத்திய ஆபிரிக்க குடியரசின் பள்ளிவாசல் மீது தாக்குதல்

Friday, May 30, 20140 comments


மத்திய ஆபிரிக்க குடியரசை சேர்ந்த கிறிஸ்தவ இளைஞர்கள் குழுவொன்றால் பென்குயி நகரின் அயலில் லகோயுவங்கா நகரிலுள்ள பள்ளிவாசலொன்று தாக்கி கொள்ளையிடப்பட்டுள்ளது.

பென்குயி நகரிலுள்ள தேவாலயமொன்றில் சுமார் 15 பேர்  பலியாவதற்கு காரணமான தாக்குதல் நடத்தப்பட்டதற்கு மறுநாளே பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேவாலயத்தின் மீது முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட செலேகா போராளி குழுவே தாக்குதல் நடத்தியுள்ளது. மத்திய ஆபிரிக்க குடியரசில் 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் போராளி குழுக்களிடையே இடம்பெற்று வரும் மோதல்கள் காரணமாக  அந்நாட்டின் சனத்தொகையில் கால் பங்கினர் வீடுவாசல்களை இழந்து இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்நிலையில் பள்ளிவாசலின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது அங்கு எவரும் இருக்கவில்லை என்பதால் உயிரிழப்புகள் எதுவும் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.









Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham