நைஜீரிய சிறுமிகளை அமரிக்கா தேடுகிறது
Wednesday, May 7, 20140 comments
நைஜீரியாவில் கடத்தப்பட்டுள்ள சுமார் 200 பள்ளிச்சிறுமிகளை கண்டுபிடிக்கும் முகமாக அமரிக்கா தமது நிபுணர்களை அங்கு அனுப்பியுள்ளது.
இந்தக்குழுவில் இராணுவம், சட்ட அமுலாக்காளர்கள், மற்றும் நிறுவன பிரதிநிதிகள் அடங்குகின்றனர் என்று அமரிக்க ஜனாதிபதி பெரெக் ஒபாமா அறிவித்துள்ளார்.
இதேவேளை மேலும் 8 சிறுமிகள் நைஜீரியாவின் வடகிழக்கு பகுதிகளில் இருந்து போகோ ஹராம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது
இதற்கிடையில் தாம் கடந்த ஏப்ரல் 14 ஆம் திகதி பள்ளி ஒன்றில் இருந்து கடத்திய 230 சிறுமிகளை விற்பனை செய்யப்போவதாக போகோ ஹராம் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபூபக்கர் சேய்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Post a Comment