நான் ஜனாபதியினால் இஃவானுல் முஸ்லிமீனை ஒழித்துக்கட்டுவேன் என்று எகிப்தின் முன்னாள் சர்வாதிகார இராணுவ தளபதியும், தற்போதைய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அப்துல் பத்தாஹ் அல் ஸீஸி தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக ஒளிபரப்புச் செய்யப்பட்ட தொலைக்காட்சி பேட்டியில் ’நான் ஆட்சிக்கு வந்தால் இஃவானுல் முஸ்லிமீனை ஒழித்துக்கட்டுவேன்’ என்று அவர் சூளுரைத்துள்ளார்.
அப்துல் பத்தாஹ் அல் ஸீஸியின் தலைமையிலான இராணுவம், சதிப்புரட்சி மூலம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் எகிப்தில் முதன் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட இஃவானுல் முஸ்லிமீன் தலைமையிலான அரசை கவிழ்த்துவிட்டு ஆட்சியை அராஜகமாக பறித்துக்கொண்டது. ’ஏதேனும் அரசியல் நலனுக்காக முர்ஸியின் அரசை கவிழ்க்கவில்லை’ என்று கூறிய அல் ஸீஸி நாட்டின் ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சியை மீட்டெடுப்பதே தனது முயற்சியாக இருக்கும் என்று தெரிவித்தார்.
Post a Comment