புரூனேயில் ஷரீஆ சட்டம் முதன்முறையாக அமுலுக்கு வந்துவிட்டது
Friday, May 9, 20140 comments
முதல் கட்டமாக இஸ்லாமிய தண்டனைச் சட்டத்தை புரூனே நடைமுறைப்படுத்தியுள்ளது. மே மாதம் முதலாம் திகதி முதல் ஷரீஆவின் முதல் கட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதாக அந்நாட்டின் ஆட்சியாளர் சுல்தான் ஹஸனுல் புல்கியா அறிவித்துள்ளார்.
இதேவேளை, கட்டம்கட்டமாக புரூனேவில் ஷரீஆ சட்டம் அமலுக்கு வரும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குற்றத்தைப் பொறுத்து சாட்டை அடி, கல்வீசி கொலை செய்தல், கை வெட்டுதல் ஆகிய தண்டனைகள் அமலுக்கு வரும். இத்தகைய தண்டனைகளை நிறைவேற்றும்போது தெளிவான ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே தீர்ப்பு அளிக்கப்படும் என்று புரூனே சுல்தானுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வழக்குகளின் சூழலைப் புரிந்துகொண்டு கல்வீசி கொலை செய்தல், கை வெட்டுதல், சாட்டை அடி ஆகிய தண்டனைகளை விலக்க நீதிபதிகளுக்கு அதிகாரம் உண்டு. புரூனேவில் 4 லட்சம் மலாய் முஸ்லிம்களும், 15 சதவீதம் முஸ்லிம் அல்லாத சீன வம்சத்தினரும் உள்ளனர்.
Post a Comment