கசினோ சூதாட்டத்திற்காக அரசாங்கத்தினால் அனுமதிப்பத்திரங்கள் விநியோகம்
Friday, May 9, 20140 comments
இலங்கையில் கசினோ சூதாட்டத்திற்காக ஐந்து அனுமதிப்பத்திரங்கள் விநியோகிக்கப்பட்டிருக்கின்றன. மேலதிகமாகவோ அல்லது புதிதாகவோ அனுமதிப் பத்திரங்கள் விநியோகிக்கப்படவில்லை. ஏற்கனவே விநியோகிக்கப்பட்டுள்ள ஐந்து அனுமதிப் பத்திர உரிமையாளர்களுடன் எவரும் பங்குதாரர்களாக இணைந்துக் கொள்ள முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
நேற்று வியாழக்கிழமை தகவல் ஊடக நிலையத்தில் இடம் பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த போதே அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல மேற் கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில் ,
இலங்கையில் ஏற்கனவே கசினோ சூதாட்டத்திற்கென ஐந்து அனுமதிப்பத்திரங்கள் விநியோகிக்கப்பட்டிருக்கின்றன. மேலும் பிதிய அனுமதி பத்திரங்கள் எதுவும் விநியோகிக்கப்படவில்லை. கசினோ அனுமதிப் பத்திரத்தை பெற்றிருப்பவர்கள் யாராகவும் இருக்கலாம். கசினோ எனும் போது ஜேம்ஸ் பெக்கரின் பெயர் மட்டுமே ஞாபகத்திற்கு வரவேண்டும் என்பது அர்த்தமல்ல. ஜேம்ஸ் பெக்கர் இல்லாத வேறு நபர்களும் இதற்கு சொந்தக்காரர்களாக இருக்கலாம். கசினோ அனுமதி சொந்தக்காரர்களுடன் இணைந்து எவரும் செயற்பட முடியும். ஆனால் புதிதான அனுமதிப் பத்திர விநியோகம் என்பது சாத்தியப்படாததொன்றாகும்.
இதே வேளை ஜேம்ஸ் பெக்கர் தனது நண்பருடன் மோதலில் ஈடுப்பட்டார் என்ற விடயத்தில் நாம் எதனையும் கூற முடியாது ஏனெனில் அது அவரது தனிப்பிட்ட விடயமாகும் என்றார்.
Post a Comment