ரிஷாட் பொதுபலசேனாவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யாதிருப்பதேன்?
Sunday, May 4, 20140 comments
தேர்தல் காலத்தில் வீராப்புடன் பேசிவிட்டு தேர்தல் முடிந்த பிறகு மௌனியாய் இருப்பது ஏன் ?
முற்றி சந்தைக்கு வந்த கத்தரிக்காய் விற்கப்படாமல் சந்தையை விட்டும் மறைக்கப்பட்டது ஏன்...?
அமைச்சர் றிஸாத் பதியூர்தீன் அவர்கள் தென்,மேல் மாகாண சபை தேர்தல் அரங்கேறிய காலகட்டத்தில் பொது பல சேனா அமைப்பிற்கு தன் மீது கூறிய விடயத்தை நிரூபிக்க 14 நாட்கள் அவகாசத்தை வழங்கி இருந்தார். இந்த அவகாசம் தேர்தல் முடியும் காலத்தை தாண்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.
அமைச்சரின் அவகாரசத்தின் படி ஏப்ரல் 21 ம் திகதி வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும். தேர்தல் முடிந்த பிறகும் தான் 21 ம் திகதி வழக்கு தாக்கல் செய்வேன் என தெரிவித்தார். எனினும், ஏன் வழக்கு தாக்கல் இது வரை செய்யவில்லை என்பதுதான் நீங்காத மர்மமாக மக்கள் மனதில் நிலைகொண்டுள்ளது.
தேர்தல் காலத்தில் வீராப்புடன் பேசிவிட்டு தேர்தல் முடிந்த பிறகு மௌனியாய் இருப்பது ஏற்புடையதல்ல. தேர்தல் காலங்களில் இவர் "இது இவரின் தேர்தலுக்கான நாடகமே ", "தேர்தல் முடிந்தவுடன் இது பற்றி மறந்துவிடுவார்" "இவர் வழக்கு தாக்கல் செய்ய மாட்டார்" என பல்வேறு கோணங்களில் விமர்சிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment