வில்பத்து பகுதியில் முஸ்லிம்களை குடியேற்றுவதில் தவறில்லை – பசில் ராஜபக்ஷ
Monday, May 5, 20140 comments
மன்னார் மறிச்சக்கட்டி பிரதேசத்தில் முஸ்லிம் மக்களை மீள் குடியேற்றுவதற்கு முன்னதாக இயற்கை பாதிப்புக்கள் குறித்து ஆராயப்பட்டதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாதிப்புக்கள் கிடையாது என உறுதிப்படுத்தியதன் பின்னரே மக்கள் மீள்குடியேற்றப்பட்டனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.எனினும், சிங்கள பௌத்த கடும்போக்கு அமைப்புக்கள் இதற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன.
சிஹல ராவய, பொதுபலசேனா உள்ளிட்ட அமைப்புக்கள் முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்படுவதனை விரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. யுத்தத்தின் பின்னர் வர்த்தமானியில் அறிவிப்பதற்கு முன்னதாக முழுமையாக இந்த விபரங்கள் கவனத்திற் கொள்ளப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.முஸ்லிம்களை மட்டுமன்றி தமிழ் சிங்கள மக்களையும் மீள்குடியேற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
வெல்லஸ்ஸ பகுதியில் உள்ள காடுகளை அழித்தே சிங்கள மக்கள் மீள்குடியேற்றப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.நாட்டின் ஏனைய சில பகுதிகளிலும் காட்டுப் பகுதிகள் அழிக்கப்பட்டு குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment