நாட்டுக்கு தேவைப்படுவது மௌலவிமார்களா? மனிதர்களா?
Sunday, May 4, 20140 comments
நாட்டில் சுமார் 200 மேற்பட்ட இஸ்லாமிய கலாசாலைகள், மத்ரஸாக்கள் உள்ளன. இவற்றில் இருந்து வெளிவரும் தயாரிப்புகளின் நிலைகள் பற்றி ஒரு நிமிடம் யோசிக்க வேண்டியுள்ளது.
இன்று நவீனசமூகத்துக்கு முகம் கொடுக்க தயாரான நிலையில் எத்தனை மாணவர்கள் மத்ரஸாக்களில் இருந்து வெளிவருகின்றனர். சில அடிப்படை விடயங்களுக்கு கூட முகம் கொடுக்க முடியாத நிலையிலேயே இன்று மதரஸாக்களில் இருந்து வெளிவரும் தயாரிப்புக்களின் நிலையாக உள்ளது.
பொதுவான பார்வையில் பாடசாலைக்கல்வியை சரியாக தொடரமுடியாத அதிகம் குழப்பம் விளைவிக்க கூடிய மாணவர்களேயே மத்ரஸாக்களில் பெற்றோர் கொண்டு சேர்க்கின்றனர் அவர்களை எந்தளவுக்கு தயார்படுத்தி அவர்கள் சமூகத்துக்கு அனுப்படுகின்றனர் என்ற கேள்வி எனக்குள் பல தடவை ஏற்பட்டுள்ளது.
சில மத்ரஸாக்களின் கொள்கைக்கூற்றுக்களையும் இலக்குகளையும் பார்க்கும் போது மிகவும் ஆச்சரியமாக இருக்கும். ஆனால் அங்கிருந்து வெளியேற்றப்படும் தயாரிப்புக்களை பார்த்தால் வெறும் மனப்படம் செய்து ஒப்புவிக்க கூடிய டேப்ரெக்கோடர்களாகத்தான் வெளிவருகின்றன.
இந்நிலைக்கான காரணம் என்வென்று தேடிப்பார்த்தால் சில நவீன கற்றல் கற்பித்தல் முறைகளை இன்னும் இந்நாட்டு இஸ்லாமிய கலாசாலைகள் உள்வாங்கிக் கொள்ள தயங்குகின்றன. மரபுகளில் இருந்து வெளியே வந்து நவீனசமூகத்துக்கு முகம்கொடுக்க கூடிய மொழிபுலம்மிக்க சமூகம் எதிர்கொள்ளும் சவால்களை முறியடிக்க கூடிய இஸ்லாமிய அறிஞர்கள் உருவாக்கப்படவேண்டியது காலத்தின் தேவை.
அதற்கு மத்ரஸாக்களை மையப்படுத்தி இருக்கின்ற மத்ரஸாக்களின் தலைமை அதிகாரிகள், பொறுப்புதாரிகள் மரபுகளில் இருந்து நவீனமுறைகளை நோக்கி சற்று நகர வேண்டியுள்ளது, மதிப்புகுறிய பொறுப்புதாரிகளே மிகப்பெரிய உலகளாவிய இஸ்லாமிய அறிஞர்களை உருவாக்க முடியாவிட்டாலும் குறைந்தது சமூக செயற்பாடுகளில் இணைந்து நடக்கத் தெரிந்த சிறந்த மனிதர்களையாவது உருவாக்கள். நாட்டில் உள்ள இஸ்லாமிய கலாநிலையங்களின் பொறுப்புதாரிகள் இவ்வாறு காலத்தின் தேவையை உணர்ந்து சமூக மாற்றத்திற்காய் முன்வர வேண்டியது அவசியமாகும்.
Post a Comment