ஆப்கானிஸ்தான் வடகிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவில் சிக்கியுள்ள மக்களைத் தேடி இன்று இரண்டாவது நாளாகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பின்தங்கிய பதாக்ஷான் மாகாணத்தில் பெய்த கடுமையான மழையில் மலைப்பாங்கான பகுதியொன்று கிராமம் ஒன்றின் மீது சரிந்துள்ளது.
இந்த நிலச்சரிவு அவலத்தில் சுமார் இரண்டாயிரம் மக்கள் வரை உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுவதாக உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர்.
நேற்றிரவு 350க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டன. 10 அடி ஆழத்திற்கு சேற்றுமண் கிராமத்தை மூடியுள்ளது.
சவல்களைக் கொண்டும் வெறும் கைகளாலும் சேற்றுமண்ணைத் தோண்டும் நடவடிக்கையில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் மண்சரிவுகள் ஏற்படலாம் என்ற அச்சம் உள்ளதாகவும் கிராம மக்கள் பலர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் ஐநா கூறுகின்றது.
Post a Comment