ராவணா பலய ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது

Wednesday, May 28, 20140 comments



மதவிவகாரங்களுக்கான பொலிஸ் பிரிவு வேண்டாம் எனக்கோரி ராவணா பலயவைச்சேர்ந்த தேரர்கள் மதவிவகாரங்களுக்கான அமைச்சில் அமர்ந்திருந்து நடத்திய ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பொலிஸ் மா அதிபரிடம் நேரத்தை ஒதுக்கிதருவதாக அமைச்சின் செயலாளர் எழுத்து மூலமாக வழங்கிய உறுதிமொழியை அடுத்தே ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து அகன்று சென்றனர்.

மத விவகாரங்கள் தொடர்பில் விசாரணை நடத்த உருவாக்கப்பட்டுள்ள விசேட பொலிஸ் பிரிவை கலைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தால் முற்றுகை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ராவணா பலய அமைப்பின் செயலாளர் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

மத விவகாரங்கள் தொடர்பில் விசாரணை நடத்த உருவாக்கப்பட்டுள்ள விசேட பொலிஸ் பிரிவு காரணமாக இலங்கை தொடர்பில் சர்வதேசத்திற்கு தவறான தகவல் வழங்கப்படுவதாக ராவணா பலய அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

வெசாக் போய தினத்தின் பின் குறித்த பொலிஸ் பிரிவு கலைக்கப்படாவிட்டால் பிரிவு அமைந்துள்ள அலுவலகம் முற்றுகையிடப்படும் என ராவணா பல அமைப்பினர் முன்னதாக அறிவித்திருந்த நிலையில் இன்று அதனை செயற்படுத்தியுள்ளனர்.

எச்சரிக்கை விடுக்கும் வகையில் தான் உள்ளிட்ட பிக்குகள் படுக்கை, தலையணை, விரிப்பு சகிதம் மத அலுவல்கள் மற்றும் புத்தசாசன அமைச்சு அமைந்துள்ள கட்டடத்தில் முகாமிட்டுள்ளதாக இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.

Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham